General
June 2, 2026

பிரிட்டிஷ் அரசுக்கு கொடுத்த ₹35,000 கடன்: இன்று ₹12 கோடி

Share:
109 ஆண்டுகள் பழமையான பிரிட்டிஷ் கடன் பத்திரம்!

முதலாம் உலகப்போர் (1914–1918) காலத்தில் இந்தியா பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்தது. இந்திய வீரர்கள் போரில் ஈடுபடுத்தப்பட்டதோடு, இந்திய பொருளாதார வளங்களும் போருக்காக பயன்படுத்தப்பட்டன.

இந்நிலையில், மத்தியப்பிரதேசத்தின் சஹோர் பகுதியைச் சேர்ந்த சேத் ஜூம்மாலால் குடும்பத்தில் 109 ஆண்டுகள் பழமையான ஒரு கடன் பத்திரம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, 1917-ஆம் ஆண்டு காலகட்டத்தில் இவரின் தாத்தா பிரிட்டிஷ் அரசுக்கு ₹35,000 கடனாக வழங்கியதாக கூறப்படுகிறது.

தற்போது அந்தத் தொகைக்கு வட்டியுடன் சுமார் ₹12 கோடி கிடைக்க வேண்டுமென சேத் குடும்பத்தினர் சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

109 ஆண்டுகளுக்கு முன் பிரிட்டிஷ் அரசு இந்தியரிடம் வாங்கிய கடன்... இன்று திரும்ப கிடைக்குமா என்பது கவனிக்கப்படும் கேள்வியாகியுள்ளது.

அந்த ஆவணத்தில் அக்கால பிரிட்டிஷ் அரசியல் முகவரான W. S. Davis-ன் கையொப்பம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் சட்ட நிபுணர்கள், காலவரம்புச் சட்டம் (limitation), அரசின் இறையாண்மை பாதுகாப்பு (sovereign immunity), மற்றும் சர்வதேச அதிகார வரம்பு (jurisdiction) போன்ற காரணங்களால் இந்தக் கோரிக்கையை நடைமுறைப்படுத்துவது மிகவும் கடினம் எனக் கூறுகின்றனர்.