ராஜலட்சுமி என்று ஒரு உதவி ஆய்வாளர் 1999 ல் பணியில் சேர்ந்தார். பணியில் சேர்ந்தது முதல், அவரது முழுநேர வேலை “வசூல், வசூல் மற்றும் வசூல்”.
பொருளாதார குற்றப் பிரிவு, போக்குவரத்து புலனாய்வு பிரிவு, என்று பல பிரிவுகளில் மாறி ராஜலட்சுமி வந்து சேர்ந்தது விபச்சார தடுப்பு பிரிவு. இப்பிரிவில் ராஜலட்சுமியின் மாத மாமூல் 50 லட்சம். இதில் 30 லட்சம் மாதம்தோறும் அருணுக்கு சென்றது. இத்தொகையை மாதம்தோறும் வாங்கி அருணிடம் தந்தவர் அருணின் முகாம் உதவியாளர் ஐயப்பன்.




ராஜலட்சுமி வசூலில் கொடிகட்டி பறக்கும் விஷயம் அவர் உடன் பணியாற்றும் பல உதவி ஆய்வாளர்களுக்கு தெரியவந்தது. காவல்துறை முழுக்க இத்தவகவல் பரவியது.
தமிழக லஞ்ச ஒழிப்பு துறையில் அவர் மீது சொத்து குவிப்பு வழக்கு பதிவு செய்யப்படுகிறது. வழக்கை பதிவு செய்தவர் லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளர் விமலா.
இவ்வழக்கு பிப்ரவரி 2026 ல் பதிவு செய்யப்படுகிறது. ராஜலட்சுமி வீட்டில் சோதனை செய்யப்படுகிறது. வழக்கு விசாரணை நடக்கிறது.
முதல்வர் விஜய் கண்டெடுத்த தங்கம் (அருண்) லஞ்ச ஒழிப்புத் துறைக்கு நியமிக்கப்படுகிறார். ஒரு சில நாட்கள்தான் அந்த தங்கம் பொறுமையாக இருந்தது.
தங்கம் செய்த முதல் வேலை, மாதம் 30 லட்சம் மாமூல் கொடுத்த ராஜலட்சுமி மீது சொத்துக்குவிப்பு வழக்கை பதிவு செய்த விமலா என்ற நேர்மையான ஆய்வாளரை சஸ்பெண்ட் செய்தார் அருண். அதோடு ஜாய் தயாள் என்ற DSPயை ஊட்டிக்கு மாற்றினார் அருண்.
“லஞ்ச ஒழிப்புத்துறையிலேயே லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்தார்” என்று அருணிடம் மாத மாமூல் வாங்கும் Times of India Selvaraj போன்றோர் தகவலை பரப்ப, இசெய்தி உண்மையா இல்லையா என்பதை விசாரிக்காமலேயே பதிப்பித்தார் செய்தியாளர்கள்.
நேர்மையான அதிகாரியான விமலா, சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகி தனக்கு நேர்ந்த அநீதியை முறையிட்டார். சென்னை உயர்நீதிமன்றம், விமலாவின் பணி இடைநீக்கத்தை “உள்நோக்கம் கொண்டது” என்று கூறி தடை செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.


ஊழல் புகாருக்கு ஆளான அதிகாரி பணியில் இருப்பதும், (ராஜலட்சுமி) அவரை விசாரணை செய்யும் அதிகாரி (விமலா) சஸ்பெண்டில் இருப்பதுமாதான வினோதத்தை கேள்விப்பட்டிருக்கிறீர்களா !!! தமிழகம் முதல்வர் விஜய் கண்டெடுத்த தங்கம் செய்த சாதனை இது. !!!