Politics
June 5, 2026

அரசியல் பயிற்சி, கட்சி தொடக்கம், தேர்தலில் போட்டி - பாதை வகுத்த அண்ணாமலை

Share:
We The Leaders Annamalai

பாஜகவில் அண்ணாமலை அவர்களின் விலகல் ஏற்கப்பட்டதாக பாஜக தேசியத் தலைமை அறிவித்த நிலையில் இன்று ஜூன் 5 நண்பகல் 12 மணிக்கு சமூக ஊடகங்கள் மூலம் மக்கள் முன்பு உரையாற்றினார் அண்ணாமலை.

அப்போது, ஆரோக்கியமான அரசியல் இயக்கத்தை தொடங்குகிறோம்! அடுத்த தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவோம் என்று தன்னுடைய அறிவிப்பை வெளியிட்டார்.

முன்னதாக பேசும்போது, பாஜகவில் தான் இணைவதற்கு ஒரு நாள் முன்பு, தலைவர் ரஜினிகாந்த் அவர்கள் என்னைத் தொடர்பு கொண்டு, தன்னுடைய இயக்கத்தில் இணைய அழைத்ததாகவும், ஆனால் என்னால் இணைய முடியவில்லை என்பதால் அவரை நேரில் சந்தித்து மன்னிப்பு கோரினேன் என்றும் தெரிவித்தார்.

Annamalai Speech at We The Leaders
Annamalai IPS

புதிய கட்சி தொடங்கும் முன்னதாக தான் ஏற்கனவே 2020-ல் தொடங்கிய We The Leaders அமைப்பில் அணைவரும் இணைந்துகொள்ள அண்ணாமலை கேட்டுக்கொண்டார். இந்த அமைப்பின் மூலம் உறுப்பினர்களுக்கு அரசியல் சார்ந்த பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

மாறுவோம் மாற்றுவோம் என்ற முழக்கத்துடன் தன்னுடைய உரையை முடித்துக் கொண்டார்.

அவர் அறிவிப்பை வெளியிட்ட சில நிமிடங்களில், ஒரு லட்சம் உறுப்பினர்களைக் கடந்தது We The Leaders அமைப்பு. தற்போது 4 இலட்சத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர் இணைந்துள்ளனர்.

Link - wetheleader.org