வைட்டமின் B என்பது ஒரே ஒரு வைட்டமின் அல்ல. இது B1 (Thiamine), B2 (Riboflavin), B3 (Niacin), B5 (Pantothenic Acid), B6, B7 (Biotin), B9 (Folate) மற்றும் B12 ஆகிய பல வகை வைட்டமின்களின் தொகுப்பாகும். இவை உடலுக்கு ஆற்றல் வழங்கவும், நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், சிவப்பு இரத்த அணுக்கள் உருவாகவும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
வைட்டமின் B குறைபாட்டின் அறிகுறிகள்
- அதிக சோர்வு
- வாய்புண்
- உடல் பலவீனம்
- நினைவாற்றல் குறைவு
- கை, கால் மரத்துப்போவது
- நாக்கு எரிச்சல்
- இரத்த சோகை
- மனநிலை மாற்றங்கள்
வைட்டமின் பி குறைபாடு உள்ளவர்களுக்கு நாக்கு சிவப்பாக மாறுதல், வீக்கம், புண்கள் அல்லது எரிச்சல் ஏற்படுவது பொதுவானது. சிலருக்கு வாயின் மூலைகளில் கீறல்கள் (Cracks at the corners of the mouth) கூட காணப்படலாம்.
வைட்டமின் B நிறைந்த சிறந்த உணவுகள்
- முட்டை (1 or 2)
- பால் & தயிர்
- சார்டின், சால்மன், டூனா போன்ற மீன்கள் (மத்தி மீன், சூரை மீன்)
- கோழி இறச்சி
- ஆட்டு கல்லீரல்
- துவரம் பருப்பு, பாசிப்பருப்பு, கொண்டைக்கடலை, காராமணி
- கம்பு, கேழ்வரகு, சோளம், ஓட்ஸ் மற்றும் முழு கோதுமை
- பசலைக்கீரை, முருங்கைக்கீரை போன்ற பச்சை இலைக் காய்கறி
- வாழைப்பழம்
- அவகடா
- பாதாம், வேர்கடலை
- காளான்
- ஆரஞ்சு மற்றும் சிட்ரஸ் பழங்கள்
- சோயா மற்றும் டோஃபு
- ஈஸ்ட் (Nutritional Yeast)
வைட்டமின் "B' உள்ள கீரைகள்
- முருங்கைக் கீரை
- பசலைக் கீரை
- வெந்தயக் கீரை
- கறிவேப்பிலை
- புதினாக்கீரை
- கொத்துமல்லிக் கீரை
Bjain Omeo Mouth Ulcer Tablet | Homeopathic Support for Mouth Sores & Oral Irritation
Bjain Omeo Mouth Ulcer Tablets combine homoeopathic actives indicated for aphthous ulcers to reduce inflammation, pain and sensitivity while supporting the mucosal healing environment. The formula targets common oral ulcer sites—lips, cheeks and under the tongue—and helps with stinging blisters, bleeding on touch, painful gum boils, fetid breath and hypersalivation.