கிரீன் டீயில் (Green Tea) ஆன்டிஆக்ஸிடன்ட்கள், பாலிபீனால்கள் மற்றும் கேட்டச்சின் நிறைந்துள்ளன. இது வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து உடல் எடையை குறைக்க உதவுகிறது, இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறது, நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்துகிறது மற்றும் செரிமானத்தை சீராக்குகிறது.
Green Tea Benefits, Green Tea in Tamil, பச்சை தேநீர் நன்மைகள், Weight Loss Tips, Diabetes Diet, Healthy Drinks, Natural Health Tips, மற்றும் Healthy Lifestyle பற்றிய முழுமையான தகவல்களை இந்தப் பதிவில் அறிந்து கொள்ளலாம்.
Benefits Of Green Tea
- இதய பிரச்சனைகள் மற்றும் கொலஸ்ட்ரால் அளவுகளின் அபாயத்தைக் குறைக்கிறது.
- புற்றுநோய் தடுப்பு.
- எடை குறைக்க உதவுகிறது.
- பெண்களில் ஹார்மோன்களை பராமரிக்கிறது.
- குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
- மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தும்
- நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
- சரும ஆரோக்கியத்திற்கு உதவும்.
- நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும்.
கிரீன் டீ நன்மைகள்
கிரீன் டீ குடல், கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாக பல ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன
கிரீன் டீயில் ஃப்ளவனாய்டு (Flavonoid), கேட்டச்சின் (Catechin) முதலான பாலிபீனால்கள் (Polyphenol) அதிகம் உள்ளன. இவை சிறந்த ஆன்டிஆக்ஸிடன்ட்களாகச் செயல்பட்டு, உடலில் உள்ள செல்கள் சிதையாமல் பாதுகாக்கின்றன. இளமையிலேயே வயதான தோற்றம் வராமலிருக்க, தினமும் ஒரு கப் கிரீன் டீ அருந்தலாம்.
கிரீன் டீயில் சிறிதளவு காஃபின் (Caffeine) இருக்கிறது. இது மூளையில் உள்ள நியூரோ டிரான்ஸ்மீட்டர்களைத் தூண்டி, நரம்பு இயக்கங்களைப் புத்துணர்ச்சி அடையச் செய்கிறது.இதனால் சுறுசுறுப்பான உணர்வு கிடைக்கும். மூளை நன்றாக இயங்கும்.
கிரீன் டீ தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு, மறதி நோயான அல்சைமர், மூளையில் டோபோமைன் சரியாகச் சுரக்காததால் வரும் பார்கின்சன் வருவதற்கான வாய்ப்பு 25 சதவிகிதம் குறைகிறது.
கிரீன் டீ ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்தது என்பதால், உடலில் தேவையற்ற கட்டிகளை வளரவிடாது. பெருங்குடல், மார்பகம் மற்றும் ப்ராஸ்டேட் புற்றுநோய் போன்றவை வருவதற்கான வாய்ப்புகளை கிரீன் டீ குறைக்கிறது.
கிரீன் டீயில் அமினோ அமிலங்கள் உள்ளன. இது உடல் மற்றும் மனச் சோர்வைப் போக்கக்கூடியது. எனவே, மன அழுத்தம் உள்ள சமயங்களில் கிரீன் டீ அருந்தலாம்.
வெயிட்லாஸ் செய்ய விரும்புகிறவர்கள் தினமும் ஒரு கிளாஸ் கிரீன் டீ அருந்தலாம். இது கொழுப்பைக் கரைத்து ஸ்லிம் ஆக உதவும்.
தலைவலியைக் குணமாக்க
தலைவலி வந்து விட்டால், முதலில் அனைவருக்கும் நினைவில் வருவது டீ தான். இந்த கிரீன் டீயும் அந்த வகையையே சார்ந்தது. தலைவலி வரும் சமயத்தில் கிரீன் டீ அருந்தும் போது, குறைவான வலியை அனுபவிப்பர் என கூறப்படுகிறது.
பற்கள் வெண்மையாகுதல்
பச்சை தேயிலையானது பற்களை வெண்மையாக்குவதில் மிகவும் பயனுள்ளதாக அமைகிறது. பற்களில் இருக்கக் கூடிய பிளேக் கட்டிகளை எதிர்த்துப் போராடுவதற்காக இந்த கிரீன் டீ உதவுகிறது.
கண் பாதுகாப்பு
கிரீன் டீ உட்கொள்பவர்கள், அதனை குடிக்காதவர்களை விட சிறந்த கண்பார்வையைக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
சர்க்கரை நோய்க்கு ஏற்றது
ரத்தத்தில் குளுக்கோஸ் கலக்கும் வேகத்தை கிரீன் டீ கட்டுப்படுத்தும்.
கிரீன் டீயில் உள்ள பாலிஃபீனால், இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக்கி, சர்க்கரை நோய் வரும் அபாயத்தைக் குறைக்கும். கொரியன் ஆய்வு ஒன்றில், க்ரீன் டீயை குடிப்பதால், டைப்-2 சர்க்கரை நோயின் அபாயம் 33% குறைவாக தெரிய வந்துள்ளது.
கொலஸ்டிரால் குறைய கிரீன் டீ
கிரீன் டீயில் தயமின் எனும் வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ் அதிகம் உள்ளது. தொடர்ந்து கிரீன் டீ அருந்தும்போது, இதய ரத்தக் குழாய்களில் சேரும் கொலஸ்ட்ரால் அளவு குறைந்து, மாரடைப்பு ஏற்படும் வாய்ப்புகள் குறையும்.