அர்ஜுன் ஹோமியோ கிளினிக் - வயிற்றுப் புண் (அல்சர்)

அறிகுறிகள், உணவு முறை மற்றும் சிகிச்சை குறித்த விரிவான வழிகாட்டி

அர்ஜுன் ஹோமியோ கிளினிக்கின் சமூக ஊடகப் பதிவு

வயிற்றுப் புண் என்றால் என்ன?

வயிற்றுப் புண் என்பது உங்கள் இரைப்பை, சிறுகுடல் அல்லது உணவுக்குழாயின் உள் பகுதியில் ஏற்படும் ஒரு புண் ஆகும். இந்த வலிமிக்க புண்கள், உங்கள் செரிமான அமைப்பை அமில சாறுகளிலிருந்து பாதுகாக்கும் சளிப் படலம் குறையும்போது உருவாகின்றன. இது இரைப்பையின் திசுக்களை செரிமான அமிலங்கள் அரித்து, புண்ணை ஏற்படுத்துகிறது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் ஹெலிகோபாக்டர் பைலோரி (H.pylori) எனும் பாக்டீரியா தொற்று மற்றும் நீண்ட நாட்களுக்கு வலி நிவாரண மருந்துகளை உட்கொள்வது போன்றவை இதற்கு முக்கிய காரணங்களாக அமைகின்றன.

அறிகுறிகள்

  • மேல் வயிற்றுவலி

  • சாப்பிடும் முன் / பின் வலி அதிகரித்தல்

  • பசியின்மை

  • நெஞ்செரிச்சல்

  • அதிகப்படியான ஏப்பம்

  • அஜீரணக் கோளாறு

  • வயிறு உப்பூசம்

  • குமட்டல் / வாந்தி

  • எடை குறைதல்

  • கருப்பு நிற மலம் வெளியேறுதல்

  • வாய்ப்புண்

பரிந்துரைக்கப்படும் உணவுகள்

    அமிலத்தன்மை அற்ற பழங்கள்
    • வாழைப்பழம்
    • பப்பாளி
    • அவகேடோ
    • தர்பூசணி
    வேகவைத்த காய்கறிகள் + கீரைகள்
    • கேரட்
    • பீட்ரூட்
    • பூசணி
    • சுரைக்காய்
    • பாலக்கீரை
    காரம் & உப்பு குறைவான உணவுகள்
    • வேகவைத்த உருளைக்கிழங்கு
    • பச்சரிசி சாதம்
    • காய்கறி சூப்
    • பருப்பு வகைகள்
    முட்டை, மீன், இறைச்சி
    • வேகவைத்த முட்டை
    • ஆவியில் வேகவைத்த மீன்
    • தோல் நீக்கப்பட்ட கோழி இறைச்சி
    ஓட்ஸ் & சிறு தானியங்கள்
    • ஓட்ஸ் கஞ்சி
    • கேழ்வரகு கூழ்
    • கம்பங்கூழ்
    நார்ச்சத்து நிறைந்த உணவுகள்
    • முழு தானியங்கள்
    • பட்டாணி
    • பீன்ஸ்
    • நட்ஸ்

தவிர்க்க வேண்டிய / குறைத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்

    அதிக காரமான உணவுகள்
    • மிளகாய்
    • மிளகு
    • மசாலா உணவுகள்
    டீ, காஃபி, சோடா
    • கார்பனேட்டட் பானங்கள்
    அமிலத்தன்மை கொண்ட பழங்கள்
    • ஆரஞ்சு
    • எலுமிச்சை
    • தக்காளி
    • அமிலம் நிறைந்த பழச்சாறுகள்
    வறுத்த / பொரித்த உணவுகள்
    • பிரெஞ்ச் ஃப்ரைஸ்
    • வடை
    • பஜ்ஜி
    • சமோசா
    பதப்படுத்தப்பட்ட உணவுகள்
    • சிப்ஸ்
    • பிஸ்கட்
    • பேக்கரி பொருட்கள்
    துரித உணவு வகைகள்
    • பர்கர்
    • பிஸ்ஸா
    • நூடுல்ஸ்

ஹோமியோபதி சிகிச்சை

ஹோமியோபதி சிகிச்சை முறையில், வயிற்றுப் புண்களுக்கு மருந்துகள் வழங்குவதுடன், அதன் மூல காரணத்தை கண்டறிந்து அதற்கான தனிப்பட்ட சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சிகிச்சை பக்கவிளைவுகள் அற்றது மற்றும் நிரந்தர தீர்வைக் கொடுக்கும். ஹோமியோபதி மருந்துகள், செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்தவும், இரைப்பை அமில உற்பத்தியைக் கட்டுப்படுத்தவும், புண்களை விரைவாக குணப்படுத்தவும் உதவுகின்றன. இது ஒரு இயற்கையான, பாதுகாப்பான மற்றும் முழுமையான அணுகுமுறையாகும்.

தொடர்பு கொள்ள

முகவரி: உழவர் சந்தை அருகில், கரூர் - 639001

தொலைபேசி: 8940 656 345

WhatsApp-ல் தொடர்புகொள்ள Google Map Location