Waiting Quotes in Tamil | காத்திருப்பு கவிதைகள்

அவன் விட்டுச்சென்ற இடத்தில் என் இதயம் விட்டுச்சென்றேன்! அவன் திரும்பினால், தூது வா! இல்லையேல் காத்திரு என்று!
வழி மீது விழி வைத்துக் காத்திருந்தேன் பெண்ணே, நீ வகுப்புக்கு பாடம் கற்கப் போகும் வழியில், என் காதல் கொஞ்சம் கற்பிக்க!
நாட்களை எண்ணிக்கொண்டே நகர்கிறோம்... நானும், என் காதலும் கள்வனின் வருகைக்காக!
காதல் செய்வதில் வளமையாக இருக்கிறாள்! காக்க வைப்பதில் வறுமை போல் வதைக்கிறாள்...
காத்திருப்பேன் உனக்காக கவிதைகள்
குழம்பிய மனதில் உன் கோப்புகள் நிறைந்த இதயத்துடன், காத்திருப்பேன் உன் வருகைக்காக நீங்கா துயரத்துடன்!
ஏமாற்றி விடாதே... உன் வருகைக்காக காத்து நிற்கிறது, என் காதல்...
காதல் தோட்டத்தில் பூவாய் காத்திருந்தேன், ராணி தேனீயின் வருகைக்காக!
இருண்டு கிடைந்த வாழ்க்கையில் அமைதியாக வந்து அந்தமும் ஆன என்னவனை கொஞ்ச காத்திருக்கிறேன்!
காத்திருந்த காதல் கவிதைகள்
யாரோடும் பேசாத மவுனங்களின் அர்த்தம் அவை யாரோ ஒருவரின் பேச்சுக்காக காத்திருக்கின்றன என்பதாகும்!
இரசிப்பதற்கு ஆயிரம் இருந்தும், நான் இரசிக்கக் காத்திருப்பது உன்னை மட்டும்...
காக்க வைக்க பழகிவிட்டாள் அவளும்; காத்திருக்க பழகிவிட்டேன் நானும்...
Waiting Love Quotes in Tamil
உனைச் சேரத்தானே இப்பிறவி எடுத்தேன். உன்முகம் காணுகையில், என்முகம் மறந்தேன். உன் கைகோர்த்து நான் வலம்வரும் காலம் என்றோ? உன் வருகைக்காக காத்திருக்கிறேன் பல நினைவுகளுடன்...
உந்தன் வருகையை எதிர்பார்த்து காத்திருக்கின்றேன்! நீ என் மணாளனாக அமைவதற்கு மட்டுமல்ல, என் தந்தையின் மறு உருவமாக அமைவதற்கும் தான்!
Waiting for Love Quotes in Tamil
உனக்காகத் தான் என் தேடல்... உனக்காகத் தான் என் பிறவி... உன்னை பார்க்கும் நோடிகளுக்காக... சில ஆயிரம் தடவயாவது இறந்து ஒரு முறை பிறப்பதற்கு ஜென்மம் ஜென்மமாய் காத்திருக்கிறேன் கண்மணியே!
கனவுகளை சுமப்பவர்களுக்கு தான் தெரியும், காத்திருப்பதன் சுவாரசியம்!
சுற்றும் கடிகாரமும் எதிரியானது, உனக்காக நான் காத்திருக்கும் வேளையில்!
அலையாய் நீ வந்தாய், உப்பாய் கரைந்து போனேன்; மின்னலாய் நீ வந்தாய், இடியாய் இடிந்து போனேன்; காதலனாய்க் காத்திருக்கிறேன், நீ என் காதலியாய் வருவாய் என!
Waiting Love Quotes in Tamil
உனக்காக காத்திருக்கும் ஒவ்வொரு நிமிடமும் உணர்கிறேனடா, நீயில்லாத வாழ்க்கை வெறுமை என்று!
மழைத்துளி கானா நதி போல, உன் விரல் ஓரம் கைக்கோர்க்கும் நாளுக்காக வருடங்களாய் காத்திருக்கிறேன்!
நீ எப்பொழுது வருவாய் நனைத்து விடலாம் என்றெண்ணி காத்திருக்கும் மழையைப் போல, காத்திருக்கிறேன்... நானும் என் அன்பெனும் மழையுடன்!
காத்திருப்பும் சுகமாகிறது, உனக்கானது என்றாகும் போது!
காத்திருக்கிறேன்... உன் விரல் பிடிக்கும் அந்த ஒரு நொடிக்காக, காத்திருக்கிறேன்!
காத்திருப்பு கவிதைகள்
நீ பேருந்துக்காக காத்திருக்கிறாய்! நான் உன்னைப் பார்ப்பதற்காக பேருந்து நிலையத்தில் காத்திருக்கிறேன்...
ஒருதலைக் காதலனுக்கு தெரியும், காத்திருத்தலின் வலி என்னவென்று!
சூரியனின் வருகைக்காக காத்திருக்கும் பூக்களின் மொட்டுக்களை போல, என் இதயம் உன் வருகைக்காக காத்துகிடக்கின்றதடி காலமெல்லாம்!
காலமெல்லாம் காத்திருப்பேன் கவிதை
என்னவளுக்காக வருடங்களாய் காத்திருந்தேன், அவளை கண்டவுடன் காத்திருந்த வருடங்களும் காற்றில் துறந்தது, வாடியிருந்த இதயம் வண்ணத்துப்பூச்சியாய் பறந்தது, தனித்திருந்த தனிமையும் தன்னலம் மாறி வானில் சிறகடிக்கிறது!
காத்திருக்கும் நொடிப் பொழுதெல்லாம் உந்தன் நினைவுகள் என் இதயத்தை அன்பின் அலையாக அரவணைத்துச் செல்லுதடி, அன்பே!
காத்திருக்கும் காதல் கவிதைகள்
கரம் கோர்த்து காதல் பேசிட காத்து நிற்கிறேன், காலம் எல்லாம் உன் வருகைக்கு...
காத்திருத்தல், என்றுமே அழகுதான்... அது உனக்கானதாக இருக்கையில்!
Waiting Tamil Quotes
உனக்காக காத்திருக்கும் பட்டியலில் கடைசியாய் இருக்க விருப்பமில்லை பெண்ணே... உன் மனதை கவர ஏதேனும் வழி இருந்தால் சொல்லடி!
Waiting Kavithai In Tamil
இரவின் வருகையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஒழியும், தேவதையின் வருகையை எதிர்பார்த்து காத்திருக்கும் என் காதலும் அழகுதான்!
Waiting Kavithai
விழிகளின் உறக்கத்தில், நிலவின் ஒளியில் கனவில் வந்து என் தூக்கத்தை கலைத்த உன் கொலுசின் ஓசையை என் இதயத்தில் தடம் பதிக்க காத்திருக்கிறேனடி!
Waiting Feeling Miss U Quotes In Tamil
உன்னை கரம் பிடிக்கும் நேரத்திற்காக காத்திருந்து என் காலங்கள் கடந்தாலும், அந்த காத்திருப்பு கூட என் காதலின் வலிகளையும் உன் பிரிவின் துயரையும் உணர்த்துகிறது என் அன்பே!
Message