Vivekananda Quotes in Tamil | விவேகானந்தர் பொன்மொழிகள்

உலகில்‌ இதுவரை வாழ்ந்த மாமனிதர்கள்‌ எல்லாம்‌ நமக்கு. உணர்த்தி நிற்கின்ற ஒன்று உண்டு. அது, நாமும்‌ உன்னத்‌ வாழ்க்கை வாழலாம்‌ என்பதே. நாம்‌ பின்பற்றி நடப்பதற்காகச்‌ காலமெனும்‌ பெரும்‌ மணற்பரப்பில்‌ தங்கள்‌ வாழ்க்கை மற்றும்‌ உபதேசங்கள்‌ என்னும்‌ காலடித்‌ தடங்களை அவர்கள்‌ விட்டுச்‌ சென்றனர்‌.

Vivekananda Quotes in Tamil
அனைவரையும் நேசி! எல்லோரிடமும் மரியாதையாக நடந்துகொள்! ஆனால், உன் கொள்கையில் உறுதியாக இரு... - விவேகானந்தர்
நேரத்தை வீணாக்கும் போது கடிகாரத்தைப் பார்! ஓடுவது முள் அல்ல உன் வாழ்க்கை! - சுவாமி விவேகானந்தா
உலகம் எவ்வாறு நடக்கின்றதோ உலகத்தோடு பொறுந்திய வகையில் தானும் அவ்வாறு நடப்பதே அறிவாகும்.
கீழ்த்தரமான தந்திரங்களால் இந்த உலகில் மகத்தான காரியம் எதையும் சாதித்துவிட முடியாது.
நம்மை நாமே வெறுக்காமல் இருப்பது நமது முதல் கடமை.
அச்சமே துயரத்தைத் தரும். அச்சமே கேட்டை விளைவிக்கும். அச்சமே மரணத்தைத்தரும். நமது உண்மை நிலையை அறியாததாலேயே நமக்கு அச்சம் ஏற்படுகிறது.
பேச்சுத்திறமை என்பது சரியான இடத்தில சரியான சமயத்தில் சரியாகப் பேசுவது மட்டுமல்ல. தவறான வார்த்தைகளைப் பேசிவிட வேண்டும் என்று மனம் துடிக்கும்போது பேசாமல் இருப்பதும் தான்.
அறிவுச் சுரங்கத்தைத் திறப்பதற்கான திறவுகோல் மன ஒருமைப்பாடாகும்.
இந்திய நாடே என் கோயில். நாம் தொழ வேண்டிய செல்வம் நமது தேச மக்கள்.
ஆசைக்கு கண்ணில்லை. அது மனிதனை நரகத்தில் தள்ளி விடும். அன்பில் கரைந்து விடு. அது உன்னை சொர்க்கத்தில் சேர்த்து விடும்.
பிறரிடமிருந்து நல்லதைக் கற்றுக் கொள்ள மறுப்பவன், இறந்தவனுக்கு ஒப்பாவான்.
நீ தியாகம் செய்ய தயாராக இருந்தால் மட்டுமே உலகிலுள்ள மற்றவர்களை வெல்ல முடியும்.
எதையும் தெரியாது என்று சொல்லாதே. சாதிக்கும் துணிவோடு அஞ்சாத போர்வீரனைப் போல செயல்படு.
பெருமை, பட்டங்களைப் பெறுவதில் இல்லை. பட்டங்களைப் பெற தகுதியுடைவராக உருவாக்கிக் கொள்வதில்தான் இருக்கிறது.
ஏழைச் சிறுவன் கல்வியை நாடி வர முடியாவிட்டால் கல்விதான் அவனை நாடிப் போக வேண்டும்.
எது உண்மை, எது நல்லது என்று நீ நினைக்கிறாயோ அதை உடனே நிறைவேற்றுவதே நல்லது.
ஒருவன் முன்னேற முதலில் தன்னம்பிக்கையும் அடுத்து இறை நம்பிக்கையும் அவசியம்.
நன்மையைப்போலவே தீமையிலிருந்தும் மனிதன் பெரும் பாடங்களைக் கற்றுக் கொள்கிறான்.
நான் எதையும் சாதிக்க வல்லவன், என்று சொல்லுங்கள். நீங்கள் உறுதியுடன் இருந்தால் பாம்பின் விஷம்கூட சக்தியற்றதாகி விடும்.
வாழ்வின் லட்சியம் இன்பம் என்று எண்ணி நாம் ஓடிக் கொண்டே இருக்கிறோம். ஆனால், அறிவுதான் நம் வாழ்வின் உண்மையான லட்சியம்.
மனிதனுக்கு மன அமைதியைத் தருவதுதான் மதத்தின் அடிப்படை இலட்சியமாகும்.
இதயமில்லாமல் வெறும் புத்திக்கூர்மை மட்டுமிருந்தால் அது ஒருவனை சுயநலக்காரனாக மாற்றிவிடும்.
இன்னும் நாம் செய்யவேண்டிய வேலைகளையெல்லாம் செய்ய ஆற்றல் பெறவேண்டுமா? முதலில் பொறாமையை ஒழியுங்கள்.
இந்த உலகம் பெரியதொரு பயிற்சிக் கூடம். நம்மை வலிமைப்படுத்திக் கொள்வதற்காகவே இங்கு வந்திருக்கிறோம்.
இந்த உலகில் நீங்கள் வந்துள்ளதால் உங்கள் முத்திரை ஒன்றை விட்டுச் செல்லுங்கள்.
பலமே வாழ்வு, பலமின்மையே மரணம்.
எஜமானனாக இருப்பதற்கு முன் ஒருவன் வேலைக்காரனாகவும் இருக்க வேண்டும்.
உன் மனசாட்சிதான் உனக்கு ஆசான், அதைவிட வேறு ஆசானில்லை.
உலகில் பாவம் என்பதாக ஒன்று உண்டு என்றால் அதுதான் ஒருவனின் பயமும் பலவீனமும்.
ஒரு இலட்சியத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். தவறுகளிலிருந்தும் தாழ்வுணர்ச்சியில் இருந்தும் விடுபடுவீர்கள்.
எதிர்காலத்தைப் பற்றியே எண்ணிக் கொண்டிருப்பது நிகழ்காலத்தையும் கெடுத்துவிடும், எதிர்காலத்தையும் கெடுத்துவிடும்.
அன்பு ஒன்றே மிகப்பெரிய ஆயுதம். பெரிய பெரிய ஆயுதங்களால் வெல்ல முடியாத ஒருவனைக்கூட அன்பு என்ற ஒரே ஆயுதத்தால் வீழ்த்திவிடலாம்.
எந்த வேலையையும் தன் விருப்பத்திற்கேற்றவாறு மாற்றுபவன் எவனோ அவனே அறிவாளி.
படிப்பு வெறும் தீக்குச்சியைப் போன்றது, எந்தப் பிரச்சனையோடாவது உராயும்போதுதான் அதிலிருந்து சிந்தனை சுடர் ஏற்படுகிறது.
ஆசையற்றவனே அகில உலகிலும் மிகப் பெரும் பணக்காரன்.
தித்திப்பும், பாராட்டும் அதிகம் போனால் திகட்டிவிடும்.
கடன்களோடு வாழ்வதை விட இரவில் சாப்பிடாமல் படுப்பது நலம்.
அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே! கோபத்தை வெளிப்படுத்தும் முன் யோசிக்க மறந்து விடாதே!
எதிர்காலத்தில் நாம் எப்படி இருப்போம் என்பது இப்போது நாம் செய்யும் காரியங்களை, எண்ணும் எண்ணங்களை பொறுத்தது.
துருப்பிடிதுத் தேய்வதைவிட உழைத்துத் தேய்வது மேலானது.
பிறர் முதுகுக்குப் பின்னால் நாம் செய்யவேண்டிய காரியம் தட்டிக்கொடுப்பது மட்டும்தான்.
மரணத்தைப் பற்றி கவலைப்படாதே, நீ இருக்கும்வரை அது வரப்போவதில்லை. அது வரும்போது நீ இருக்கப்போவதில்லை பிறகு எதற்கு கவலை?
நீண்ட தூரம் ஓடிவந்தால்தான் அதிக உயரம் தாண்டமுடியும்
உங்களை முதலில் கட்டுப்படுத்துங்கள். பின்பு உலகமே உங்கள் வசமாகும்.
அடுத்தவனின் பாதையைப் பின்பற்றாதே உன்னுடைய பாதையைக் கண்டுபுடி.
சுத்தப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டிய தண்ணீர் தொட்டி உங்கள் மனமே.
எந்த குடும்பத்தில் உள்ள பெண்மை கொண்டாடப் படவில்லையோ, அந்த வீடும் பாழ்; அந்த நாடும் பாழ்.
இதயம் சொல்வதை செய்! வெற்றியோ தோல்வியோ அதை தாங்கும் சக்தி அதற்கு மட்டும் தான் உண்டு
வெற்றிகளை சந்தித்தவன் இதயம் பூவை போல் மென்மையானது. தோல்வி மட்டுமே சந்த்தித்தவன் இதயம், இரும்பை விட வலிமையானது
தோல்விகளைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். லட்சியத்திலிருந்து 1000 தடவை வழுக்கி விழுந்தாலும், லட்சியத்துக்கு உழைப்பதில் பிழைகள் நேர்ந்தாலும் திரும்பத் திரும்ப அந்த லட்சியத்தைப் பிடித்துக் கொள்ளுங்கள். லட்சியத்தை அடைய 1000 தடவை முயலுங்கள். அந்த 1000 தடவை தவறினாலும் இன்னுமொரு முறை முயலுங்கள். முயற்சியைக் கைவிடாதீர்கள்.
பிறரது பாராட்டுக்கும் பழிக்கும் செவிசாய்த்தால் மகத்தான காரியம் எதையும் செய்ய முடியாது.
வலிமையே மகிழ்ச்சிகரமான நிரந்தரமான வளமான அமரத்துவமான வாழ்க்கை ஆகும்.
பகை, பொறாமை ஆகியவற்றை நீ வெளியிட்டால், அவை வட்டியும் முதலுமாக மீண்டும் உன்னிடமே திரும்பி வந்து சேர்ந்துவிடும்.
சோம்பேறித்தனத்தை எந்த வழியிலும் துரத்தியாக வேண்டும். சுறுசுறுப்பு என்பதற்கு எதிர்ப்பது என்பது பொருள்.
நான் இப்போது இருக்கும் நிலைக்கு நானே பொறுப்பு
நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய்; உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்! ஆனால் முயற்சி தேவை
சுயநலமின்மை, சுயநலம் என்பவற்றைத் தவிர, கடவுளுக்கும் சாத்தானுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை.
செயல் நன்று, சிந்தித்து செயலாற்றுவதே நன்று. உனது மனதை உயர்ந்த லட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்பு. அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன் முன் நிறுத்து; அதிலிருந்து நல் செயல்கள் விளையும்.
பலவீனம் இடையறாத சித்ரவதையாகவும் துன்பமாகவும் அமைகிறது.
உன்னை நீயே பலவீனன் என்று நினைத்துக் கொள்வது மிகப் பெரிய பாவம்.
தன்னலம் சிறிதும் இல்லாமல், நிறைந்த அன்புடன் பழகுபவர்களே இப்போது உலகத்திற்குத் தேவைப்படுகிறார்கள்.
தன்னலம் சிறிதும் இல்லாமல், நிறைந்த அன்புடன் பழகுபவர்களே இப்போது உலகத்திற்குத் தேவைப்படுகிறார்கள்.
எப்போதும் பொறாமையை விலக்குங்கள். இதுவரையிலும் நீங்கள் செய்யாத மகத்தான காரியங்களை எல்லாம் செய்து முடிப்பீர்கள்.
அடிமைகளின் குணமாகிய பொறாமையை முதலில் அழித்துவிடு.
நமது சமுதாயம் இப்போது இருக்கும் தாழ்ந்த நிலைமைக்கு மதம் காரணம் அல்ல. மதத்தை முறையாகப் பின்பற்றாமல் போனதுதான் சமுதாயத்தின் வீழ்ச்சிக்குக் காரணம்!
தீண்டாமையை தீவிர கொள்கையாகவும், உணவு உண்பதையே தெய்வமாக கருதும் வரை நீங்கள் ஆன்மிகத்தில் முன்னேறமுடியாது.
சோம்பல் கூடாது. பொறாமை, அகங்காரம் ஆகியவற்றை ஒரேயடியாக கங்கையில் எறிந்துவிடு. பிறகு பெரும் பலத்துடன் வேலை செய். பேராற்றலுடன் செயல்களத்தில் இறங்குங்கள்.
எல்லோரிடமும் அன்பாயிரு. துன்பப்படுபவர்களிடம் பரிவுகொள். எல்லா உயிர்களையும் நேசி. யார்மீதும் பொறாமைப்படாதே. பிறரது குற்றங்களைக் காணாதே!
உண்மைக்காக எதையும் துறக்கலாம், ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்கக் கூடாது.
ஞானம், பக்தி, யோகம், கர்மம் இவை முக்திக்கு அழைத்துச் செல்லும் பாதைகள்!
ஆயிரம் முறை இடறி விழுவதன் மூலம் உன் நற்பணபை நிலைநிறுத்து!
எந்தக் காரியமானாலும் அதில் நிகழ்கின்ற பிழைகளும் தவறுகளும் மட்டுமே நமக்குப் படிப்பினையாக அமைகின்றன. தவறு செய்பவனே சரியான பாதையைக் காண்கிறான்.
முன்னேறிப் போங்கள். பல யுகங்களாகப் போராடி வருவதன் பயனாகவே குணநலன் பக்குவமடைகிறது. மனம் தளராதீர்கள்.
உனக்குத் தேவையான எல்லா வலிமையும் உதவியும் உனக்குள்ளேயே உள்ளன.
நீ செய்த தவறுகளை வாழ்த்து. அவைகள், நீ அறியாமலே உனக்கு வழிகாட்டும் தெய்வங்களாக இருந்திருக்கின்றன!
வெற்றியை சந்தித்தவன் இதயம் பூவை போல் மென்மையானது! தோல்வியை சந்தித்தவன் இதயம் இரும்பை விட வலிமையானது!
நான் எதையும் சாதிக்க வல்லவன் என்று சொல். நீ உறுதியுடன் இருந்தால் பாம்பின் விஷம்கூட சக்தியற்றது ஆகிவிடும்!
நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய்! உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்!
தூய்மையாக இருப்பதும் மற்றவர்களுக்கு நன்மை செய்வதும் தான் எல்லா வழிபாடுகளின் சாரமாகும்!
அறிவு வரும்போது மனிதன் முதிர்ச்சி அடைகிறான். அவனிடம் ஒழுக்கம் நிலவுகிறது!
பாமரனைப் பண்புள்ளவனாகவும், பண்புள்ளவனைத் தெய்வமாகவும் உயர்த்தும் கருத்தே மதம் எனப்படும்!
எல்லோரிடமும் அன்பை கொடுத்து ஏமாந்துவிடாதே! யாரிடமும் அன்பை பெற்றுக் கொண்டு ஏமாற்றிவிடாதே!
உலகம் எவ்வளவு பெரியதோ, அவ்வளவு பெரியதாக உங்கள் இதயத்தை விரிவாக்குங்கள்!
உற்சாகமாக இருக்கத் தொடங்குவதுதான் வெற்றிகரமான வாழ்க்கை வாழத் தொடங்குவதற்கான முதல் அறிகுறி!
உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்கதே!
நல்லெதிர்பார்ப்பு மனப்பான்மையையும், எல்லாவற்றிலும் நல்லதையே பார்க்கும் பாங்கையும் நாம் வளர்க்க வேண்டும். நமது மனத்திலும் உடம்பிலும் உள்ள குறைபாடுகளை நினைத்து, நாம் உட்கார்ந்து அழு வதில் எந்த லாபமும் இல்லை. எதிர் மறையான சூழ்நிலைகளை அடக்குகின்ற வீர முயற்சியே நம் ஆன்மாவை மேலே கொண்டு செல்லும்!
உங்களிடம் நம்பிக்கை கொள்ளுங்கள்! செல்வம் வேண்டுமானால் அதற்காகப் பாடுபடுங்கள்! அது நிச்சயம் உங்களை வந்து சேரும்!
எழுந்திருங்கள், விழித்திருங்கள். இனியும் உறங்காதீர்கள்!
எதைச் செய்யவும் நாம் தயாராக இருக்கிறோம். நம்மால் எதையும் செய்ய முடியும் என்று உறுதி கொள்ளுங்கள்.
எல்லா ஆற்றல்களும் உங்களுள் இருக்கிறது. உங்களால் எதையும் செய்ய முடியும் என்று நம்புங்கள்!
இந்த உலகில் புகழுக்கும் இகழுக்கும் மதிப்புக் கிடையாது. ஊஞ்சலை ஆட்டுவது போல ஒரு மனிதனை, புகழின் புறமாகவும், இகழின் புறமாகவும், இங்கும் அங்கும் ஆட்டுகின்றார்கள்
தொண்ணூறு சதவிகித சிந்தனையின் ஆற்றல், சாதாரண மனிதனால் வீணாக்கப்படுகிறது.
ஏழைச் சிறுவன் கல்வியை நாடி வர முடியாவிட்டால் கல்விதான் அவனை நாடிப் போக வேண்டும்.
வாழ்வில் வேகம் மட்டும் இருந்தால் போதாது, விவேகம் இருக்க வேண்டும்.
உலகம் எவ்வாறு நடக்கின்றதோ உலகத்தோடு பொறுந்திய வகையில் தானும் அவ்வாறு நடப்பதே அறிவாகும்.
எல்லா நாகரிகங்களுக்குள் அடிப்படை சுயநல தியாகமே.
பிறர் முதுகுக்குப் பின்னால் நாம் செய்யவேண்டிய காரியம் தட்டிக்கொடுப்பது மட்டும்தான்
இந்த உலகம் மிகப்பெரிய ஓர் உடற்பயிற்சிக் கூடம். இங்கு நாம் நம்மை வலிமையுடவர்களாக்கிக் கொள்வதற்காக வந்திருக்கிறோம்.
'நான் எதையும் சாதிக்க வல்லவன்' என்று சொல். நீ உறுதியுடன் விஷத்தை பொருட்படுத்தாதிருந்தால், பாம்பின் விஷமும் உன் முன் சக்தியற்றதே.
உன்னிடத்தில் நீ நம்பிக்கை வை, எல்லா ஆற்றல்களும் உன்னுள்ளேயே உள்ளன. அதை உணர்ந்து அந்த ஆற்றலை வெளிப்படுத்து
மிகப்பெரிய உண்மை இது - வலிமை தான் வாழ்வு; பலவீனமே மரணம்.
நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னை பலவீனன் என்று நினைத்தால் பலவீனனாகவே ஆகிவிடுவாய். நீ உன்னை வலிமையுடயவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆகிவிடுவாய்.
அளவு கடந்த ஆற்றலை வெளிப்படுத்தப் போதுமான அளவிற்கு உண்மையாக நீ முயற்சி செய்யாத போது தான் தோல்வி அடைகிறாய். ஒரு மனிதனோ, ஒரு நாடோ தன்னம்பிக்கை இழந்த உடனே அழிவு வருகிறது.
தன்னம்பிக்கை கொண்டிருந்த ஒரு சிலருடைய வரலாறே உலக சரித்திரமாகும்.
வாழ்வும் சாவும், நன்மையும் தீமையும், அறிவும் அறியாமையும் ஆகியவற்றின் கலவைதான் மாயா, அல்லது பிரபஞ்சத்தின் இயல்பு. இந்த மாயத்துள் நீ எல்லையற்று மகிழ்ச்சிக்காக அலையலாம், ஆனால் நீ தீமையையும் காண்பாய். தீமையின்றி நன்மை இருக்குமென்பது சிறுபிள்ளைதனம்.
உனது மனதை உயர்ந்த இலட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்பு. அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன் முன் நிறுத்து; அதிலிருந்து நல் செயல்கள் விளையும்.
செயல் நன்று, சிந்தித்து செயலாற்றுவதே நன்று.
உலகின் குறைகளை பற்றி பேசாதே. குறைகளை நோக்கி வருத்தப்படு, எங்கும் நீ குறைகளை காண்பாய். ஆனால், நீ உலகுக்கு உதவி செய்ய விருப்பினால் உலகை தூற்றாதே, குறை சொல்லாதே. குறை சொல்லி உலகை இன்னும் பலவீனப்படுத்தாதே. உலகின் குறைகள், குற்றங்கள் எல்லாம் அதன் பலவீனத்தால் விளைபவை அல்லவா.?
Self Confidence Swami Vivekananda Quotes in Tamil
எழுமின், விழிமின், குறிக்கோளை அடையும் வரை நில்லாது உழைமின்.
Vivekananda Tamil Quotes
உன் வாழ்க்கையின் எந்த ஒரு நாளில் உன் முன்னால் எந்தப் பிரச்சினையையும் நீ சந்திக்காமல் முன் செல்கிறாயோ, அப்பொழுது தவறான பாதையில் நீ பயணிக்கிறாய் என்று அறிவாய்.
Swami Vivekananda Quotes in Tamil
பலமே வாழ்வு; பலவீனமே மரணம்
Message