Smile Quotes in Tamil | புன்னகை கவிதைகள்
பெண்ணின் அழகான சிரிப்பு மற்றும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் சிறிய புன்னகை பற்றிய அழகான தமிழ் கவிதை வரிகள்
புன்னகை கவிதை வரிகள்
வெட்கப் புன்னகையில் ஏனடி என்னைத் தாளிக்கிறாய், கொஞ்சம் கொஞ்சமாய்!

என்னவளின் புன்னகை கவிதை
வலிகள் எதுவாயினும் ஏற்பேன். உன் ஒற்றை புன்னகையை நான் காண்பதற்காக!

நிசப்தமான நிலையில் நிலையான இசையை கேட்டேன், அவளின் சிரிப்பினில்...

புன்னகை பூக்கள் கவிதை
பூவின் மொட்டு ஒரே நொடியில் மலர்ந்து விரியும் அழகினை கண்டு வியந்தேன்... உன் இதழோர புன்னகையில்!

புன்னகை கவிதை ஹைக்கூை
அத்தனை அழகையும் ஒன்றாக்கிய ஒரு சிரிப்பு! அது, அவளுக்கு மட்டுமே பொருந்தும் என்பது தான் தனிச்சிறப்பு!

நீ சிரித்தது கொஞ்சம், அதில் சிதறியது என் நெஞ்சம். மீண்டும் பார்க்க மனம் கெஞ்சும், அதை பார்க்காத போது ஏமாற்றமே மிஞ்சும்! அவளின் புன்னகையால் கவிஞன் ஆனேன் நான்... என் கவிதையின் ரசிகையாக அவள்!

உந்தன் இதழ் ஓரப் புன்னகை போதுமடி, வலி கண்ட எந்தன் மனம் தேற...

காயங்கள் கரைந்தாலும், மாயங்கள் மறைந்தலும், அழியாத வடு உன் சிரிப்பூ!

பெண்ணின் புன்னகை கவிதை
பார்வைகள் இல்லாமல், வார்த்தைகள் இல்லாமல் வெட்கப்பட வைத்துவிட்டாள், சிறு மௌனப் புன்னகையில்!

உந்தன் குறுநகையில் கண்டேன், புன்னகை ஒரு புதுவகை போதை என்று!

அவளிதழில் புன்னகை பூக்க, என்னுள் காதலும் பூத்தது!

வேறு நகை தேவையில்லை; புன்னகை மட்டுமே போதும், உலகை அழகு செய்ய!

சிரிக்கும் ரோஜாக்கள் கூட, அவள் புன்னகையைக் கண்டால் சிந்திக்கும் ஒரு நொடி, இந்தப் பூ நம்மை விட அழகாய் இருப்பதாய் எண்ணி!

உன் ஒற்றைச் சிரிப்பு போதுமே, என் சிதறிப்போன இதயம் சிறகடித்துப் பறக்க!

நான், தினமும் சிந்திப்பதே உன்னை சிரிக்க வைப்பதற்கு தானடி! உன் முகத்தில் அந்தச் சிரிப்பைக் காட்ட, என்னை ஏன் சிரமப்படுத்துகிராயடி?

உன் அழகிய புன்னகை, என்னுள் புதுப் புது மாற்றங்களை உருவாக்குதடி என் அன்பு கள்ளியே!
