பேசாத காதல் கவிதை | Pesatha Kadhal Kavithai Tamil

மௌனமான காதலை வெளிப்படுத்த சிறந்த பேசாத காதல் கவிதைகள். Feel the magic of unspoken words with our handpicked Tamil silent love quotes and status lines.

tamil silent love quotes
மீட்டாத வீணை ராகம் தர துடிக்கிறது... பேசாத வரிகளோ, ஓர் உறவைச் சேர்க்க விழைகிறது!
பூட்டிய என் உணர்வுகளுக்குள் வாசமே இல்லாமல் உயிர் வாழ்கிறது, மலரும் நினைவுகளாய் உன் மகரந்த காதல் என்னில் அன்பே...
வலியை விட கொடுமையானது, நாம் பேச நினைக்கும் ஒருவரிடம் பேச முடியாமல் போவது தான்!
எந்நேரமும் பேசிக்கொண்டும், பார்த்துக் கொண்டிருப்பது மட்டும் காதல் அல்ல, என் நினைவில் நீயும், உன் நினைவில் நானும், நம்மை பற்றி யோசித்து கொண்டிருப்பதும் காதல் தான்!
உன் மௌனம் பாடும் பாடலின் ராகம், என் செவிகளில் மட்டுமே ஒலிக்கும்!
விளையாடாதே! உன் இதயத்தில் என்னை ஒழித்து வைத்துக்கொண்டு!
காரணமே இல்லாமல் பேசாதே என சொல்வதும், காரணம் கேட்டால் மௌனத்தால் கொல்வதும் பெண்களின் ஆயுதம்!
பேசும் வார்த்தை எல்லோருக்கும் புரியும்... ஆனால், மௌனத்தின் அர்த்தம் நம்மை நேசிப்பவர்க்கு மட்டுமே புரியும்!
எல்லா நேரங்களிலும் மௌனம் சம்மதம் என்று அர்த்தமில்லை, சில நேரங்களில் அவர்களுக்கு பேச இடம் கொடுக்கப் படவில்லை என்பதே நிதர்சனம்!
யாரோடும் பேசாத மவுனங்களின் அர்த்தம் அவை யாரோ ஒருவரின் பேச்சுக்காக காத்திருக்கின்றன என்பதாகும்!
நாட்கள் செல்ல, என்னுள் உன் தேடல் கூடுகிறது! தேடலில் மனம் வாடல் காண, நீ பேசாத நொடிகள் என் மனம் வறண்ட பாலைவனமே!
நாட்கள் செல்லச் செல்ல, என்னுள் உன் தேடல் கூடுகிறது! தேடலில் மனம் வாடல் காண, நீ பேசாத நொடிகள் என் மனம் வறண்ட பாலைவனமே!
வாய் விட்டுச் சொல்ல முடியாததை, வண்ண இதழ் சொல்லுமடி!
பேசாத காதல் கவிதைகள்
அழைக்க மறந்த அலைபேசிக்குள் புதைந்து கிடக்கிறது, ஒரு கோடி பிரியங்கள்!
Message