100+ Ninaivugal Quotes in Tamil | நினைவுகள் கவிதைகள்
காதல் நினைவுகள் கவிதைகள் | Love Memories Quotes in Tamil
நினைவுகளை மறக்க நினைக்கிறேன்... நினைவுபடுத்திக் கொண்டே இருக்கிறது, அவன் நினைவுகள்...
காலையில் பொழுதெல்லாம் உன் நினைவோடு கழிக்க... இரவெல்லாம் உன் நினைவுகளில் என்னை மூழ்கி கழிக்க, என்னை மறந்து அழுகிறேன் நிதம் உன் நினைவுகளால்...
உன் நினைவுகள் அத்துமீறி நுழைகையில், கவிதையில் சிக்கிக்கொள்ள முடியாமல் மீதமிருக்கும் சொற்கள்...
Ninaivugal Kavithai Tamil
இரவு முழுவதும் விழிகளில் உறக்கம் இல்லை. ஏனென்றால், இமைகளுக்கு நடுவில் உந்தன் நினைவுகள் வந்துவந்து செல்வதால்!
Aval Ninaivu Kavithai In Tamil
ஏனோ நிலவு மட்டும் அவள் நினைவுகளை நிதம் பறைசாற்றுகிறது!
Un Ninaivugal Kavithai
எப்பவாது என்கூட பேசுற உன்னை தான் எப்பவும் நான் நினைச்சிட்டு இருக்கேன்...
Ninaivu Kavithai In Tamil
உன்னை மறக்கவே என் மனதினில் ஓர் போர்க்களம்... மறுபுறமோ, பீனிக்ஸ் பறவையாய் உயிர்த்தெழும் உன் நினைவுகளின் வலம்!
Memories Ninaivugal Quotes In Tamil
உன்னை மறக்கத் தெரிந்த எனக்கு ஏனோ, உனது நினைவுகளை மறக்கத் தெரியவில்லை!
Avalin Ninaivugal Kavithai In Tamil
ஒரு கோப்பை தேநீர் வாங்கிவிட்டேன்! வரச்சொல்லுங்கள் அவள் நினைவுகளை!
பிடித்தவர்கள் எல்லாம் அருகில் இருந்துவிட்டால், நினைவுகளுக்கு என்ன மரியாதை?
Marakka Mudiyatha Ninaivugal Kavithai
கடைசி வரை நீடிக்கும் என்று நினைத்த ஒரு சிலரின் காதல், கடைசி வரை நினைவுகளாகவே தொடர்கிறது!
யாரோ ஒருவரை நினைக்காமலிருக்க எவ்வளவு பேரைத்தான் நினைத்துக் கொள்வது?
எந்தன் நினைவுகள் உன்னிடத்தில் தேய்ந்ததாலோ என்னவோ, ஓய்ந்திடவே துடித்திடுகிறது எந்தன் இதயம்!
கடந்து போனாலும், மனம் சிலவற்றை நினைத்து கலங்கி தான் கடந்து போகிறது.
உறக்கமற்ற எனது இரவுகள், வெறும் நிமிடங்களாக நகரவில்லை, உனது நினைவுகளாக நகர்கின்றது!
வாழ்க்கை எதிர்காலத்தை நோக்கி பயணிக்க, நினைவுகள் மட்டும் கடந்த காலத்தையே நோக்கி பயணிக்கிறது!
பழைய நினைவுகள் கவிதை
செல்லும் வழித்தடத்தில் எப்பொழுதோ பிடித்திருந்த பாடல் ஒன்று, யாரையோ நினைவுப்படுத்துவிடுகிறது!
எதை எதையோ புதுப்பித்துக் கொள்ளும் மனம், நினைவுகளை மட்டும் புதுப்பிக்க மறுக்கிறது...
உன்னோடு பேசாத நொடிகளில் கூட உன் நினைவோடு பேசிக் கொண்டு இருக்கிறேன்... தனிமையும் இனிமையடி உன் நினைவினால்!

மீண்டும் உன் ஞாபகம், நேற்றைப் போலவே!

அவள் நினைவுகளை நினைக்காத நாள், நிச்சயம் என் நினைவு நாளாகத்தான் இருக்கும்!

Avalin Ninaivugal Kavithai
அழுகா ஆணும் அழுவான், அவளின் நினைவுகளை எண்ணி!

மறக்காத நினைவுகள் கவிதை
எல்லா இரவுகளும் தூக்கத்தைத் தருவதில்லை! ஆனால், எல்லா கனவுகளும் உன் நினைவுகளையே தருகின்றன...

உன் நினைவுகள் யாவும், என் வரிகளில் வாழுமடி!

நினைவுகள் கவிதை வரிகள்
உன்னோடு கைகள் கோர்த்துத் கொண்டிருந்த அந்த நொடிகள், ஒரு நாள் நிஜமாகும் என்று எண்ணினேனே தவிர, ஒருபோதும் நினைவுகள் ஆகும் என்று அறிந்திருக்கவில்லை இந்தப் பேதை!

நீங்காத நினைவுகள் கவிதை
இருளெனை சூழ்ந்து கொண்டாலும், உன் நினைவொளியில் வாழ்வேன் நானும், அழகிய உலகில் உன்னோடு
