காதலியின் அழகு வர்ணனை கவிதைகள்
என் காதலியின் அழகை வர்ணிக்கும் அழகான, வர்ணிப்பு வார்த்தைகள், கவிதை வரிகள், பெண் அழகை ஆராதிக்கும் கவிதை வரிகள்
தேவதை இருப்பது உண்மையா பொய்யா தெரியவில்லை! ஆனால் என் கண்களுக்குத் தெரிந்த முதல் தேவதை நீ தான்!
அழகு தேவதை என என்னவளை வர்ணித்தேன்... தேவதைகள் வெட்கப்பட்டன!
மொழியில்லாக் கவி, அவள் கண்கள்! வரியில்லா ஓவியம், அழகியின் பார்வை!

2 Line Love Kavithai In Tamil For Her
உன் அழகைப் வர்ணித்து ஆயிரம் கவிதை எழுதிவிடுகின்றேன்... ஆயினும் உன்னைப் போல அழகான கவிதை இதுவரை பிறக்கவே இல்லை...

Heart Melting Love Quotes In Tamil For Her
அசையும் அழகு ஒன்று, அசையாமல் அழகாய் ஓய்வெடுக்கிறது!

Love Quotes For Her In Tamil
தயவு செய்து எனை பைத்தியம் ஆக்கிவிடாதே. நான் என் இறப்புவரை உன் அழகை கவிதைகளால் அழகுபப்டுத்த ஆசைப்படுகின்றேன்!

Love Quotes For Her Tamil
பேரழகே! தயவு செய்து ரவிவர்மாவின் கல்லறைக்குச் சென்று விடாதே! உன்னை வரையமுடியவில்லை என்ற கவலையில் அவன் கல்லறைப் பூக்கள் கண்ணீர் வடிக்கும்!

Love Quotes In Tamil For Her
அறிமுகம் இல்லாதவரிடம் கூட அவள் முகம் பற்றி வர்ணிப்பேன்!

Love Quotes In Tamil One Line For Her
எல்லோரிடமும் அழகு இருக்கும்! ஆனால், நீ மட்டும் தான் அழகிடம் இருக்கிறாய்!

Tamil Love Lines For Her
வானவில்லும் உடை உடுத்திக் கொள்ளுமென என்னவளால் கண்டு கொண்டேன்!

ரசனை பற்றிய கவிதை வரிகள்
கவிதை எழுத காதல் தேவையில்லை. பெண்ணின் அழகை ரசிக்கத் தெரிந்தாலே போதும்!

அவள் அங்கங்கள் அழகு கவிதை
தங்க முலாம் பூசிய இரு மலைகளைக் கண்டு ரசித்தேன், அவள் அனுப்பிய புகைப்படத்தில்!

அவள் அழகு தேவதை கவிதைகள்
அழகுக் குறிப்புகள் அவளுக்குத் தேவையில்லை! மாறாக, அழகைப்பற்றி குறிப்பெழுத நிச்சயமாக அவள் தேவைப்படுவாள்!

பெண் அழகு வர்ணனை கவிதை
பெண்ணே! உன்னைப் பார்த்தவுடன் அறிந்து கொண்டேன், அடடா! இறைவன் கூட அழகிய கவிதை எழுதுவான் என்று!

அழகு பெண் கவிதை
உன் அழகினால் நிலவும் போனதடி மருகி... அந்நிலவும் ஒப்புக் கொண்டது, இவளே பேரழகி!

அவளும்,நிலவும் ஒன்று தான்! ஏனென்றால், அவளைச் சுற்றி எங்கும் இருள் சூழ்ந்து இருந்தாலும், அவள் மட்டும் வெளிச்சமாக தெரிவாள் அந்த நிலவைப் போல்!

இருளிலும் ஒளிர்கிறாள், என்னவள்!

இவள் பெற்றோர்கள் என்ன சிலை வடிக்கும் சிற்பிகளா? இப்படி ஒரு பேர் அழகிய சிலை வடித்தது எப்படி?

காதலி கவிதைகள்
கலியுகம் வியக்கும் கலைவாணி இவளோ!

என்னவளின் அழகு கவிதை
வானவில்லின் நிறங்களை தன் கரங்களால் உரங்களாக்கி, மேனியில் பூசிக் கொண்டு பூவுலகில் அவதரித்து, சிறகடித்து பறந்திடும் என் சிறு வண்ணத்துப் பூச்சி இவள்!

பெண் அழகு கவிதை ஹைக்கூ
எதற்காக அவளை இப்படி ரசிக்கிறாய்? என கேட்கும் என் மனதின் கேள்விக்கு, இன்று வரை என்னால் பதிலளிக்க முடியவில்லை...

Aval Azhagu Kavithai Vaigal
செவ்வாழைக் கரங்களில், அழகிய வண்ண மயில் இறகு!

அவள் அழகு கவிதை
வண்ணமற்ற ஓவியம் ஒன்று தரையில் நடக்கக் கண்டேன்! கையில் எடுக்க முயலும் போதுதான், அது உன் நிழல் என்று அறிந்துகொண்டேன்!

உன் அழகு கவிதை
உன் கலைந்த முடி, அதை சரிசெய்ய முயலும் உன் விரல்! உன்னிடம் எல்லாமே அழகு தான், உன்னை இரசிக்கத் தொடங்கிய பின்!

கொள்ளை அழகு கவிதை
காற்றின் மொழியா? இசையின் ஓசையா? கடலின் அலையா?மௌனத்தின் குரலா..? அவள்!

அவள் கவிதைகள்
வீணை தன்னையே மீட்டிக் கொள்வதை, வீதியில் கண்டேனே...

அவள் காதல் கவிதைகள்
அதிகாலை உன் வாசல் கோலத்தைப் பார்த்து விட்டுத்தான் வானிலிருந்து விடைபெறுகிறது நிலவு!

பெண்ணின் அழகு பற்றிய கவிதைகள்
நீ கூட்டிப் பெருக்குவாய் என்றே சருகாய் சரிந்து கிடக்கிறது, நேற்றைய பூக்கள் நீ, கூட்டிப் போவாய் என்றே வீம்பாய் விழைந்து நிற்கிறது, இன்றைய பூக்கள்

அவள் கவிதை வரிகள்
அவள் நடந்து வந்தால், இந்த சித்திரையில் கூட வரும், ஓர் அடை மழை!

இதய ராணி கவிதை
உன் முகம் பார்த்தால் இதழ்கள் சிரிக்கிறதோ இல்லையோ. ஆனால், என் இதயம் நிச்சயமாய் சிரிக்கிறது!

அவள் கவிதை
என்னவளே! மருதாணியைத் தொட்டதால் உன் விரல் சிவக்கவில்லை. உன் விரலைத் தொட்டதால் தான் மருதாணி சிவந்தது!

அவள் அழகு காதல் கவிதை
சுற்றி ஆயிரம் பெண்கள் இருந்தும், முதலில் நீ எங்கே? என்பதைத் தான் என் கண்கள் தேடுகிறது!

என்னவளுக்கு கவிதைகள்
எல்லா பெண்களையும் கண் முழித்துப் பார்க்கிறேன். ஆனால், உன்னை மட்டும் தான் கண் இமைக்காமல் பார்க்கிறேன்!

அவள் அழகு கவிதைகள்
அவள் முகத்தில் பார்க்கும்போது தான் தெரிகிறது, கருவளையங்கள் கூட கார்மேகங்களாகத் தோன்றும் என்று!

அவள் அழகு கவிதை
என் கவிதைகளை கொண்டு வரைந்த முதல் ஓவியம், உன் முகம் மட்டுமே!

Kerala Girl Beauty Kavithai in Tamil
கேரளத்து பெண் கிளியே, நீ பேசிய கொஞ்சும் வார்த்தையிலும், கொள்ளையடிக்கும் உன் பார்வையிலும், பறி கொடுத்தேன் என்னை, காதல் சிறை பிடித்தேன் உன்னை...

Kerala Girl Beauty Quotes in Tamil
அழகுக்கே அழகு சேர்க்கும் பேரழகி அவள். என் இதயக் கோட்டைக்கு ராணி அவள், கேரளத்தில் பூத்த புன்னகைப் பூ அவள், என் உயிரினும் மேலான, என்னவள் அவள்!

உன் பளிங்கு பாதம் - காதல் கவிதை
வெட்டி வைத்த குட்டி நிலவென அவள் குதிகால்கள்...

Azhagu Quotes Tamil
உன் பாவனை செய்யுள்களுக்கு விளக்கம் புரியாமல், உரை தேடுகிறது என் மனம்!

அவள் kavithai in tamil
வளர்ந்து, தேய்ந்து, மறைந்து போகும் பவுர்ணமி நிலவைப்போல இல்லாமல், என்றும் முழு நிலவாய் என்னவள்!

பெண்ணும் கவிதையும் ஒன்று தான்! இரண்டிலும், அழகிய பொய்கள் அதிகம் இருப்பதால்!

கேரளா பெண்கள் கவிதை
பிறமொழிப் பாடல்களாக உறக்கத்தில் அவள் உளறல்கள்... புரியாத போதிலும் ரசிக்க வைக்கும்!

காதலியின் அழகை வர்ணிக்கும் கவிதைகள்
அப்படி ஒன்றும் இல்லை. காடு மலை கடந்து ஆர்ப்பரிக்கும் அருவியின் அழகு, அவள் கழுத்தோரம் எட்டிப்பார்க்கும் ஒற்றைத் துளி வியர்வையை விட...

காதலியின் அழகு கவிதை
ஏழுவித வண்ணங்களையும் கொண்டு எழுதுகிறேன்... இருந்தும் இவளின் அழகுக்கு முன்னால், எல்லா கவிதையும் தோற்று தான் போகிறது!

அவள் அழகு வர்ணனை கவிதைகள்
எல்லா நாளும் கவிதை எழுதிக் காத்துக் கிடந்தேன், உன்னை கண்ட அந்த நாளில்தான் கவிதை என்னை எழுதியது!

அவள் அழகு இல்லை என்றால், அழகு என்ற சொல்லுக்கு அர்த்தமே இல்லை!

உன் வீட்டு வாசலை அலங்கரிக்க கோலங்கள் எதற்கு? வாசலில் உன் பாதத்தை வை... அதுவே, ஆகச்சிறந்த கோலம் தான்!

உன் பார்வையே ஆயிரம் கவிதை சொல்லுதடி... உன் கண்கள் இரண்டும் பிரம்மன் படைத்த அதிசயம்தானடி...

உன் புடவைக்கான கவிதை
சேலை உடுத்திய அவள் சாலையோரம் நடக்க, கொளுத்தும் கோடையில் எனக்குள் மட்டும் ஒரு குட்டி கொடைக்கானல்!

காதலி கவிதை
அந்த பிரம்மன் கூட ஊழல் பேர் வழிதான் போல, மொத்த பேருக்கும் கொடுக்க வேண்டிய அழகை, உன் ஒருவளுக்கே கொடுத்திருக்கிறான்!

அவள் அழகு Quotes in Tamil
ஒப்பனைகள் வேண்டாம் பெண்ணே, உன் அழகிற்கு இணையாக உயிர் பெற்ற ஒன்றுமே நிகரில்லை!

காதலி அழகு கவிதைகள்
இவளைப் படைத்து, பின் நகல் எடுத்து தேவதைகளைப் படைத்தான் இறைவன்...

அழகு தேவதை கவிதை வரிகள்
தேவதை எப்படி இருப்பாள் என கேட்பவர்களுக்கு, உன்னைத் தான் அடையாளமாக காட்டி வைத்திருக்கிறேன்!

பெண் தேவதை கவிதை
தேவதைகளும் தேடிச்சென்று பார்ப்பார்கள், தாவணியுடன் என் தேவதை தெருவீதியில் வரும் வேளையில்!

காதலி வர்ணனை கவிதைகள்
நீ மட்டும் சொல்லாமல் போயிருந்தால், எனக்கும் கூட தெரியாமலேயே போயிருக்கும், நீயும் மனிதப் பிறவி என்று! தேவதை சாயலில் பூமியில் ஒரு தாரகை!
மதிமுகம் கவிதைகள்
ஆடி திருவிழாவில் நீ அசைந்து ஆடி நடந்து வரும் அழகில் அந்த தெருவெல்லாம் திருவிழா கோலாமாய் மின்னுதடி!
பெண்களை மயக்கும் வரிகள்
இருட்டில் பூத்த பூவே.. உன்னழகைப் பார்த்து ரசிக்கக் கண் கோடி வேண்டுமே!
நிலா முகம் கவிதை
பல லட்ச நட்சத்திரங்களுக்கு இடையில், ஒளிரும் நிலவு அவள் முகம்...
கட்டழகு கட்டழகு என்பார்கள், அக்கட்டழகை எல்லாம் அவிழ்த்தெரிகிறது அவள் கூந்தல் கட்டாத அழகு!
பூக்களின் தேவதை கவிதை
ஏதோ, பூக்கள் திருவிழாவாம்! தன்னை அலங்கரித்திட, உன்னை கேட்டு என்னிடம் கோரிக்கை வைக்கிறது பூக்கள்!
சிரித்த முகம் கவிதை
அத்தனை அழகையும் ஒன்றாக்கிய ஒரு சிரிப்பு! அது, அவளுக்கு மட்டுமே பொருந்தும் என்பது தான் தனிச்சிறப்பு!
நிலா முகம் கவிதை
வர்ணிக்கவே முடியாத தேவதை நீ! உன்னை மட்டுமே வர்ணிக்க நினைத்திடும் தேவதாசன் நான்!
என்னவளின் அழகு கவிதைகள்
அவளின் புன்னகையால் கவிஞன் ஆனேன் நான்... என் கவிதையின் ரசிகையாக அவள்!
காதலியை வர்ணிக்கும் கவிதை
சிலை ஒன்று வலம் வருகிறது... வேண்டுதலை நிறைவேற்றுவதாய் சொல்லி!
புடவை அழகு கவிதை
சேலையில் சோலை நீ சாலை கடந்தால், கண்ணிமைக்காது சிலையாக நான்...
காதலி அழகு Kavithai
இனிக்கும் தேனேல்லாம் உன் இதழ்களாகிட முடியாது!
பகல் வானில் தெரியும் நட்சத்திரம் என்னவளின் மூக்குத்தி!

முகம் அழகு கவிதை
வார்த்தைகளும் வரையறை அற்றதே - என் வெண்ணிலவே உனை வர்ணிக்கும் போது!
அழகிய தேவதை கவிதை
வெட்கத்தை தாண்டிய அவளின் புன்னகை விலை மதிப்பற்றது தான்!
நிலா முகம் கவிதை
இருள் அன்றி இருக்கும் நின் முகமே பௌர்ணமியே!
பெண் அழகு வர்ணனை கவிதை
நிலவில் அனலும், மலரில் வன்மையும் உண்டென்று உனைக் காணும் வரை எனக்குத் தெரியாது!
காதலியின் அழகு கவிதை
நிலவைக் கண்டு நான் நகைத்தேன், நீ அழகென அனைவரும் நினைக்கின்றனர்! நீ எந்தன் காதலியை சற்றுப்பார், நிகரற்ற அழகி அவள் நினைவில் என்றும் அவளே உனக்கும், நீயும் அவள் மீது காதல் கொள்வாய்!
காதலியை உடலை வர்ணிக்கும் கவிதை
அந்தி மாலை நேரம் அந்த சாலை ஓரம் அழகியே உனை கண்டேன்... உன் அழகில் நானும் அந்நொடியே மயங்கி விட்டேன்!
அவள் அழகு கவிதை
கோபத்தில் முறைத்தாலும் அழகு, மகிழ்ச்சியில் சிரித்தாலும் அழகு! அவள் பேசும் மொழியும் அழகு, மொழி தமிழானதால் தமிழும் அழகு!
அவள் அங்கங்கள் அழகு கவிதை
அமாவாசை: அவள் அழகை கண்டு அந்த சந்திரனே வெட்கப்பட்டு ஒளிந்து மறைந்து கொண்ட நாள்!
பூக்களின் கனிவான கவனத்திற்கு! மாலை நேரமாகிவிட்டது மலர் தொடுக்க அவள் வருகிறாள் ஒப்பனை செய்து தயாராகுங்கள்!
பேரழகு கவிதை
அழகே வெட்கம் கொள்ளும் அளவிற்கு பேரழகை உடையவள் என்னவள்...
உன் முதுகு அழகு கவிதை
அவள் புறமுதுகு காட்டி காதல் போரில் எனை வென்று விட்டாள்!
நீ கவிதைகளாய் என் முன்னே நீன்றாயே உன் கவியொளியில் நான் கவிஞன் என்பதை மறந்தேனே!
கம்பன் எழுதிய கவியில் சிதறிய துளிகள் தான் உன் கண்ணங்களோ!
Varnippu Kavithai in Tamil
எழுதுகோல் பிடித்தாலே, உன்பெயரை மட்டுமே எழுதத் தோன்றுகிறது எனக்கு!
நீ குடித்து மிச்சம் வைத்த தேநீர், எனக்குத் தேன் நீர்!
அவளின் நிழலும் கொள்ளை அழகே... அந்த நிலவும் கூட அவளின் நகலே...
பெண்கள் முக அழகு கவிதைகள்
எங்கே இருந்தாய் இதயமே நீ! உன்னை போன்ற கவிதையின் அழகை ரசிக்கும் பேரழகியை என் இதயம் இதுவரை கண்டதில்லை பெண்ணே!
ஆலயத்திலும் ஆடி மாத தள்ளுபடி! தெய்வ தரிசனத்திற்கு, தேவதை தரிசனம் இலவசம்!
Lover Tamil Kavithai
உடலெடை குறைக்கும் முயற்சியில், அதிகரிக்கிறது அவள் அழகின் எடை...
உலக அழகி கவிதை
அத்தனை பெண்களும் அழகை வைத்திருக்கிறார்கள். ஆனால், அழகென்னவோ உன்னை மட்டும் தான் வைத்திருக்கிறது!
பெண்ணே! உன்னைப் பார்க்க பகலில் வந்தேன் நான். ஆனால், என் உள்ளம் மறுத்தது, நீ இரவில் செல் என்று! ஏன் தெரியுமா? இரவில் தோன்றும் நிலவை விட, அழகான உன்னை ரசிக்க வேண்டும் என்பதற்காக!
உன்னில் எது அழகு என்று தேடத் தொடங்கும் தேடலுக்கு முடிவே இல்லை!
காதலிக்கு காதல் கவிதைகள்
ஆண்மனதை ஆக்கிரமிக்கவே இவ்வளவு வளைவு நெளிவுகளுடன் உன்னை படைத்தானோ அப்பிரம்மன்?
Peralagu Kavithai In Tamil
நீராடிய கூந்தலின் சொட்டிடும் நீரோடு அவளை காண்கையில்... துவண்ட பூ மீண்டும் துளிர்த்திடுதே, தேன் சிந்தக் காத்திடுதே!
Beauty Azhagu Quotes In Tamil
நான் கிள்ளி விளையாடிடவே, உன் இடையை பொசு பொசுவென்று படைத்தானோ?
நீ என் தேவதை கவிதை
உன் முகம் பார்த்து, உன் காதோரக் கூந்தலை ரசித்து, அந்த குட்டி ஜிமிக்கிக் கம்மலின் ஆட்டம் கண்டு, அந்த காஜல் வைத்த கண்கள் பார்வையில் சிக்கி சிறிது நேரம் இவ்வாழ்க்கையில் இன்பத்தை அனுபவிக்க ஆசையடி!
அவள் இடை அழகு கவிதை
சேலையிடையே தெரியும், இடை தரும் போதைக்கு நிகர் ஏதும் உண்டோ?
Face Beauty Kavithai In Tamil
அவ்வளவு! , இவ்வளவு! என்று அளக்க முடியா அழகியடி நீ!
கொள்ளை அழகு கவிதை
உன் கைக்கடிகாரத்திற்கும் உன்மேல் காதல் வரக்கூடும்... நீ கைக்கடிகாரத்தின் காதை திருகி நேரம் சரி செய்யும் பொழுதெல்லாம்!
Face Beauty Quotes In Tamil
உனது வாசமும், உந்தன் வெட்கமும் எனக்கு சொர்க்கமாகிப் போனதடி!
Girl Beauty Quotes In Tamil
எனக்குத் தெரியாமல் போயிற்று, உன் தந்தை அழகை வடிக்கும் தேவன் என்று!
காதலி முக அழகு வர்ணனை கவிதைகள்
உன் அழகிய புன்னகை, என்னுள் புதுப் புது மாற்றங்களை உருவாக்குதடி என் அன்பு கள்ளியே!
Girl Beauty Tamil Kavithai
உன்னை ரசிக்கும் நேரங்களில், என்இமைகளுக்கு வேலையில்லை!
Tamil Kavithai About Girl Beauty
நான் மீள விரும்பாத "போதை" இவள்!
காதலி முகம் கவிதை
சாரல் வரும் அறிகுறியை, இவளின் சாயும் முகம் சொல்கிறதே! பூக்கள் பூக்கும் தருணங்களை, இவளின் பன்னீர் புன்னகை சொல்கிறதே!
Beautiful Girl Quotes in Tamil
அழகிலும் அறிவிலும் தனக்கு நிகர் தானே என்றிருந்த, கலைமகளின் கர்வ முடைக்க பிரம்மன் படைத்த சித்திரமோ நீ!
Quotes for Beauty of Her in Tamil
வெட்டப்பட்ட இழநீருக்கு, இவள் முத்தத்தால் ஒத்தடம் தருகிறாள்!
பேரழகி கவிதை
இறைவன் படைப்பில் இல்லை வேறு யாரும், அவளைப் போல் பேரழகாய்...

அழகு ஓவியம் என்னவள் கவிதை
எத்தனை முறை பார்த்து ரசித்தாலும் சலிக்காத அழகிய ஓவியம் என்னவள்...

Tamil Kavithai For Girl Beauty
உன்னில் எது அழகு? கருவிழிகள் அழகு என்றால், உன் இமைகள் கோபித்துக் கொள்ளாதா? இமைகள் அழகு என்றால், உன் புருவங்கள் உயர்த்தி மிரட்டாதா? நெற்றிப் பொட்டு அழகு என்றால், பிரம்மன் இட்ட மச்சம் திட்டித் தீர்க்காதா?

அழகு ராட்சசி கவிதை
அவளை ரசித்து ரசித்தே கவிஞன் ஆனவன் நான்!

Tamil Quotes About Beauty
கைவசம் கவிதை எதுவும் இல்லை வாருங்கள்... அவள் வீடு வரை சென்று வரலாம்.
