100+ Love Proposal Quotes in Tamil | காதல் சொல்லும் கவிதைகள்
Love Proposal Quotes in Tamil | Best Pickup Lines in Tamil
நான் உன்னை நேசிக்கிறேன்... உன்னைப் பற்றியே யோசிக்கிறேன்... காதலை உன்னிடம் யாசிக்கிறேன்... உன் மூச்சுக் காற்றையே சுவாசிக்கிறேன்!
நம் விரல்கள் இணைந்து, இதயங்கள் ஒன்றாகி காதல் என்னும் காவியத்தில் சித்திரங்களாக காலம் முழுவதும் வாழ்வோம் வா...
ஆயுள் முழுக்க உன் அன்பு சிறையில் வாழ நான் தயார். தவறுகள் எதுவும் செய்தால் தண்டித்து விடு. விடுதலை மட்டும் செய்து விடாதே... என் அன்பே!
Best Love Proposal Lines in Tamil
காலமெல்லாம் காதல் செய்வேன், நீ எந்தன் கரம்பிடித்தால்!
ஆதாம் ஏவாளாய் மாறி காதல் எனும் கடலில் மூழ்கிப்போவோம் வா!
உன் அணைப்பில் உறக்கம் கொள்ளும் நாள் எந்நாளோ?
உன் கண்கள் சொல்லும் காதலை, உன் இதழ்கள் சொல்ல மறுப்பதேனோ?
குளிர்காலத்தில் நான் அணியும் போர்வையாக நீ வேண்டும் அன்பே!
என் காத்திருப்புகள் யாவும் உனக்காக... உன் அன்புக்காக... புரிந்து கொள்வாயா, இல்லை என்னை விலகிவிடுவாயா?
உந்தன் காதலாக வாழ்வதை விட, உந்தன் மனைவியாக வாழும் ஆசையே என்னுள்!
கனாக்கள் பல கண்டேன் உன் கை சேரும் நாளுக்காக!
நான் உயிரோடு இருப்பது எல்லாருக்கும் தெரியும். ஆனால் என் உயிர் உன்னோடு இருப்பது, யாருக்கும் தெரியாது உன்னைத் தவிர!
உன் அன்புக்கு அடிமையாக ஆசை தீரா காதலுடன், ஆயுள் வரை உன்னுடன் வாழ்ந்திட ஆசையடி எனக்கு... எதிர்பார்க்காமல் சந்தித்த உன்னை, என்னவளாக நான் எதிர்பார்க்கிறேன்...
Love Proposal Quotes In Tamil
யாரோவாக இருந்து என்னை எனக்கே அறிமுகம் செய்தாய்... நீ என் யாவுமாக இருப்பாயா?

புரியாதப் புதிராக இருந்தாலும், உன்னை நான் மட்டுமே படித்து முடிக்க வேண்டும் என்று ஆசை...
கனவில் வருவதும் நீ தான் கன்னே.... கனவல்ல நிஐமாய் உன்னை காதலிக்கிறேன் பெண்ணே...
Best Love Proposal Quotes in Tamil
ஓடும் நீரில் ஓராயிரம் மீன்கள் நீந்தினாலும், தனக்கென்ற அந்த ஒரு மீனை பிடிக்க ஒற்றைக் காலில் கடுந்தவம் புரியும் கொக்கு போல், ஓராயிரம் பெண்கள் என்னைக் கடந்து சென்றாலும் எனக்கென்ற உன்னை பிடிக்கவே ஆண்டுகள் பல கடுந்தவம் புரிகிறேன். எப்போது மனம் இறங்கி வருவாயோ பெண்ணே?

Love Proposal Tamil Kavithai
காதலை சொல்ல உதடுகள் போதும் என நினைத்திருந்தேன்... கண்ணீர் துளிகளை கண்டு கொண்டேன்... பிறகு தெரிந்து காதலை சொல்ல கண்ணில் ஈரம் மட்டும் இருந்தால் போதும் என்று...
Proposal Kavithai In Tamil
பிரகாச நட்சத்திர அழகே... உன் கண்கூசும் ஒளி அழகில் மனம் தள்ளாடி நின்றேன்.... தாங்கிக் கொள்ள தருவாயா உன் காதல் கரம்?
Romantic Love Proposal Quotes In Tamil
மௌனங்கள் பின்னே ஒளிந்து கொண்டிருக்கிறாய்! பார்வைகள் உரசுகின்ற தீயில் குளிர் காய்ந்து கொண்டு இருக்கிறாய்! நினைவுகளில் நீ மட்டுமே முழுவதுமாக நீடித்துக் கொண்டு இருக்கிறாய்! புலன்கள் ஐந்து இருந்தும், பலன்கள் இல்லாமல் செய்கிறாய்! இனியும் என்னால் முடியாது... அவளின் வாயை பிரித்துக்கொண்டு விரைவாய் என்னிடம் வந்து சேர்ந்துவிடு... காதல் என்ற வார்த்தை வடிவில்!
Love Proposal Tamil Quotes
அலையாய் நீ வந்தாய், உப்பாய் கரைந்து போனேன்; மின்னலாய் நீ வந்தாய், இடியாய் இடிந்து போனேன்; காதலனாய்க் காத்திருக்கிறேன், நீ என் காதலியாய் வருவாய் என!
Best Pickup Lines Tamil
மலர் பறிக்கும் மங்கையே, மனதையும் பறித்து விட்டாய்! உன் மலர் வாடாமல் இருக்க - நீர் வேண்டும்! என் மனம் வாடாமல் இருக்க நீ வேண்டும்!
எத்தனை பேரை என் வாழ்வில் நான் கடந்துவந்தாலும், எனக்கு ரொம்ப பிடித்த உன்னை பார்த்த பிறகு தான் வாழ்க்கை இனிமையானது.
மறைத்து வைக்க எதுவுமில்லை உன்னிடத்தில் என் காதலைத் தவிர! சொல்லிவிடவும் எதுவுமில்லை என்னிடத்தில், எம் காதலை தவிர!
உன் நெற்றியோரம் தொங்கும் ஒற்றை முடியில் ஊஞ்சலாடும் வரம் தருவாயா?
உன்பெயருக்குப் பின்னால் என் பெயரை எழுதும் வரம் நீ தரவேண்டும்! இந்தப் பெயராசை மட்டுமே பேராசையாக உள்ளது!
பெண்ணே! நான் உயிரோடு இருக்க எனக்கு ஒரே ஒரு வரம் தந்தால் போதும்! இறுதிவரை உன் கரம் தந்தால் போதும்!
எனக்கு மிகப்பெரிய ஆசைகள் இல்லை! என் கவலைகளைத் தூக்கி எரிந்து விட்டு உன் கரம் பிடிக்கும் வரம் வேண்டும்!
இடைவிடாது காதல் வேண்டும்! இடையிடையே மோதல் வேண்டும்! உன் கையால் என் தலை கோதல் வேண்டும்! இதை விட வேறென்ன வேண்டும்?
சுவாசிக்கக் காற்றே இல்லை என்றாலும் நான் உயிர் வாழ்வேன், நேசிக்க நீ இருந்தால் போதும் அன்பே...
மாட மாளிகையும் வேண்டாம்; அடை அணிகலனும் வேண்டாம்; அன்பே உன் இதயத்தில் சிறிது இடம் கொடு போதும்; அங்கேயே தஞ்சம் கொள்வேனடா!
என் வாழ்வில் விடியும் விடியலும் உனக்காகவே... என் ஆசை கனவுகளும் உன்னைச் சேரவே...
விடியும் விடியல், உன் முகம் பார்த்து விடிய வேண்டும்! நகரும் நாட்கள், உன் கைகள் கோர்த்து நகர்ந்திட வேண்டும்! கண் இமைக்கும் நொடிகளிலும், காதல் பார்வை வீசிட வேண்டும்!
Short Love Proposal Quotes In Tamil
இரவிலும் பகலிலும் நான் பார்த்து இரசிக்கும் ஒற்றை நிலவாய் நீ வேண்டும்!
உடல் எனும் கோவிலில், உள்ளம் எனும் கதவு திறந்து, இதயம் எனும் கருவறைக்குள் உன்னை உருவாய், உயிராய் செதுக்கி வைத்துள்ளேன்; என் உயிர் இருக்கும் வரை நீயும் இருப்பாய்!
வழுக்கி விழுந்தாலும் உன் மடியில்! தடுக்கி விழுந்தாலும் உன் விழியில்! தனிமையில் இருந்தாலும் உன் அருகில்! இது போதும் என் வாழ்வில்!
Tamil Love Proposal Kavithai
வானும் மண்ணும் மழையைக் கரம் சேர்க்கும் போது, உன்னையும் என்னையும் காதல் கரம் சேர்க்குமா?
Tamil Proposal Kavithai
சத்தியமாக என் இதயத்தில் நீ இல்லை! என் இதயமே உன்னிடம் தான் இருக்கிறது!
heart touching love proposal quotes in tamil
எங்கே முடியும் என தெரியாமலே தொடரும் இந்த வாழ்க்கை பாதையில், சேர்ந்து நடக்க நீ இருந்தால் சோர்ந்து போகும் வரை பயணிக்கலாம்!
தேடித் தேடி அன்பை கொடுத்த எனக்கு, தேடாமல் கிடைத்த பொக்கிஷம் நீ... உன்னை ஒருபோதும் விட்டு விட மாட்டேன்! I Love You!
Best Proposal Lines In Tamil
வார்த்தைகளுக்கு எல்லாம் வயதாகி விட்டது! ஆனால் எனக்கு நீ சொல்ல வேண்டிய சம்மதம் மட்டும் தினந்தோறும் பிறக்கிறது, உனக்காக!
Best Love Proposal Quotes In Tamil
உன் இதயச்சிறையில் ஆயுள் கைதியாகிட வரம் கேட்கிறேன்... தருவாயா?
Best Love Proposal Kavithai In Tamil
உன்னை கைப்பிடித்து வாழும் வரம் இந்த ஜென்மத்தில் கிடைக்குமா? உன்னை காதலித்த தவத்தின் பலன் மறுபிறவியில் தான் கிட்டுமா?
Love Propose Quotes In Tamil
என் நெஞ்சம் படபடக்க, உன் உதடோ துடிதுடிக்க, இதயம் ஊஞ்சல் ஆட, இருவரும் இணைந்து மூச்சுக் காற்றை சுவாசிப்போமா?
Love Propose Kavithai Tamil
முடியாத பயணங்கள் வேண்டும், உன் கை விரல் பிடித்தப்படி!

Tamil Love Propose Kavithai Lyrics
உன் அன்பை மட்டும் கடனாய்க் கொடு! ஆயுளுக்கும் எனதன்பை வட்டியாக செலுத்தும் கடன்காரியாகவே இருந்து விடுகிறேன்!
