Love Failure Quotes in Tamil | காதல் தோல்வி கவிதைகள்
சோகமான காதல் தோல்வி கவிதை வரிகள் தொகுப்பு| Sad Love Failure Quotes SMS in Tamil Text with Love Failure Quotes Images in Tamil
Love Failure Kavithai
உயிரோடு வாழும் போதே கொஞ்சம் கொஞ்சமாய் சாகும் வலி வேண்டுமா? காதலித்துப் பார்!

Yematram Love Failure Kavithai
ஒரு முறை அன்பை கேட்கும் இடத்தில் இருந்து பார் எவ்வளவு ஏமாற்றம், தயக்கம், அவமானம், கூச்சம், தவிப்பு, தடுமாற்றம், தாழ்வு மனப்பான்மையை, வருத்தம் என புரியும்!

பிரிவு காதல் தோல்வி
அளவுகடந்த அன்பினால் வரும் கோபங்களை புரிந்து கொள்ளாவிட்டால், அதுவும் சில நேரம் பிரிவுக்கு காரணமாகிறது...

கண்ணீர் காதல் தோல்வி கவிதை
மறக்க மனமின்றி கண்ணீர் வடிக்கிறேன்... இறக்க மனமின்றி இன்னும் வாழ்கிறேன்... தொலைத்த தேவதை உன்னைத் தேடி எங்கே பயணிப்பது நான்...

காதல தோல்வி விளக்கம் கவிதை
விளக்கங்கள் விடுகதைகளாகி விடும்போது விலகிச் செல்வதே விடைகளாகின்றன!

புரியாத காதல் தோல்வி கவிதைகள்
நம் மனதை புரிந்துக் கொள்ள முடியாத ஒருவரால், நம் அன்பையும் புரிந்துக் கொள்ள முடியாது!

காதல் வலி வரிகள்
காதல்! என்னைக் குத்திய கத்தியின் கூர்மை என்னால் தீட்டப்பட்டது என்பதே இதில் வலி!

காதல் தோல்வி பிரிவு கவிதை வரிகள்
எந்தத் துயரையும் தாங்கும் என் இதயம் ஏனோ, உன் பிரிவை தாங்காமல் துடிக்க மறுக்கிறது!

உறவுகள் ஏமாற்றம் காதல் தோல்வி
நான் எதார்த்தமாய் பழகுவதாலோ என்னவோ, ஏதோ அர்த்தம் சொல்லி விலகிக் கொள்கிறது பல உறவுகள்!

வெறுப்பு காதல் தோல்வி கவிதைகள்
வெறுத்துச் சென்றவர்கள் மீது வருத்தங்கொள்ள ஏதுமில்லை... தனக்கொவ்வாத நிலத்தில் எந்தத் தாவரம்தான் உயிர்க்கும்!

காதல் தோல்வி கண்ணீர் கவிதை
சிறு தேடலைக்கூட நிகழ்த்தவில்லை எனில் அதென்ன உறவு? துளி கண்ணீரைக்கூட உதிர்க்கவில்லையெனில், அது என்ன காதல்?
