Kiss Quotes in Tamil | முத்தம் கவிதைகள்

கணவன் மனைவி முத்தம், காதலன் காதலி முத்தம் கொடுத்து அன்பை பரிமாறிக் கொள்ளும் அழகான தருணத்தை பற்றிய முத்தம் கவிதை.

kiss Kavithaigal
பிடித்த வரிகளை படிக்க பிடிக்கும் என்பார்கள்... எனக்கு பிடித்த வரிகள், உன் இதழ் வரிகள் அன்பே!
நீ கடைசியா கொடுத்த முத்தத்துல மட்டும் தான் நான் இன்னும் பத்திரமா இருக்கேன்... அந்த முத்தத்த மட்டும் தான் பத்திரமா வச்சுருக்கேன்!
அவள் முத்தம் கவிதைகள்
அவள் கொடுத்த முத்தத்தை விழுங்கிவிட்டேன், உடல் முழுக்க பரவிவிட்டது காதல் நஞ்சொன்று.
முத்தம் ஹைக்கூ கவிதைகள்
உடையோடு காமம் செய்வதை விட மிகப்பெரிய தவறு, முத்தமிடாமல் காதலிப்பது!
இதழ் முத்தம் கவிதைகள்
உன் மேனியெங்கும் முத்த ஓவியங்கள் வரைய காத்துக்கிடக்கிறது, என் ஈர இதழ் தூரிகை...
Short Kiss Quotes In Tamil
ரோஜா இதழ்களின் மென்மை தோற்றுப்போகுமோ? பூக்கள் சுரக்கும் தேனின் சுவை ஏக்கம் கொள்ளுமோ? அவள் இதழ்கள்!
இரவானதுமே "நண்டு வருது, நரி வருது" என உன் மேனியில் ஊர்ந்து விளையாடிட துடிக்கிறதடி என் இதழ்கள்!
முதல் முத்தம் கவிதை
மும்முரமாக செல்லும் போது, முதல் விழும் மழைத் துளியாக அவள் முத்தம்!
என் வெட்கத்தின் நிலைத்த முகவரி, அவன் என் முகத்தில் பதிக்கும் அந்த ஒற்றை முத்தம்!
ஒரு ”முத்தம் தாயேன்” என்பதற்கும் ஒரு "முத்தமாவது தாயேன்" என்பதற்கும் இடைபட்ட வேறுபாடு தான் அவள் வேடிக்கையாய் பேசுவதும், வெட்கப் பட்டு பேசுவதும்!
உன் இதழ் கவிதைகள்
இறைவன் கூட அழகாய் கவிதை எழுதுவான் என்பதை எனக்கு உணர்த்தியது, உன் உதட்டின் வரிகள்!
நீ உறங்கும் நேரத்தில் உன் இதழுடன் இதழ் வைத்து பேசும் இதழ்கள் - காதல் மொழி!
விழி மூடி, இதழ் நீட்டி, என் விரதத்தை வெற்றி கொண்டாள்!
உனது மார்பின் அழகில் ஒளிந்து கிடக்கும் இதயத்தின் மூச்சுக் காற்றை முத்தமிட துடிக்கும் என் இதழ்கள்...
உன்னை மார்போடு மார்பணைத்து இதயத்தோடு இதயம் உறவாடி என் இதழ்களால் உன்னை ருசிப்பேனடி!
உன் நெற்றியில் முத்தமிட்டு நீ வெட்கப்படும் அழகை ரசிக்க துடிக்கும் என் விழிகள்!
என் முகத்தில் பிறந்திடும் சிவப்பு முத்திரைகளுக்கு, அவள் உதட்டில் உறவாடும் உதட்டுச் சாயமே முழு பொறுப்பு!
காதல் என்ற காந்தக் கடலில் நித்தம் என்னை நீந்த செய்தாள் முத்தம் என்னும் தீவை நோக்கி!
உதடு சுவை கவிதை
இனிக்கும் தேனேல்லாம் உன் இதழ்களாகிட முடியாது!
உதடு எச்சில் முத்தம் கவிதைகள்
உன் ஈர இதழ்கள் பேசியது; இன்னொரு முறை ஈரமாக்கேன்! என்று.
அவள் உதட்டின் சாயத்திலே, தித்திப்பாகிறது எனது உயிர்!
உன் தேனிதழ் நீர் சுவைத்த பின், தேநீரும் கசக்கின்றது!
Romantic Kiss Quotes in Tamil
இமைகளின் மோதலில், இடையினில் யுத்தம்! இதயத்தின் காதலில், இதழ்களில் முத்தம்!
இதழ் முத்தம் கவிதைகள்
ஒற்றை முத்தத்தில் ஒட்டுமொத்த சுவையும் ருசித்து விட்டேன்... அவள் இதழ் தரும் இன்பத்தேனில், இவ்வாயுளை களித்து விட்டேன்!
அவள் முத்தம் கவிதைகள்
அனைத்து சண்டைகளின் முற்றுப்புள்ளி, அவளிட்ட ஒற்றை முத்தம்!
நான் தந்த முத்தத்தின் சிதறிய மிச்சமே, உன் மேலுதட்டில் மச்சமாய்!
தேன் உதடு முத்தம் கவிதைகள்
நானும் பட்டாம்பூச்சி தான்! எனவேதான், பூக்களில் தேன் எடுக்கப் பிடிக்காமல், உன் உதட்டில் தேன் குடிக்கத் துடிக்கிறேன்!
காதலென அறியாது, காமமென அறியாது, செல்ல முத்தங்களோடு கண்கள் பேசிடும், காதல் காவியம்!
பெண்ணே... ஒரு கவிதை எழுத வேண்டும் உன் இதழ் வரிகளில், என் முத்தங்களால்!
உன் காதோரக் கம்மல் அசைந்தாடும் அழகை, உன்னுடன் இதழ்களால் பேசிக்கொண்டே அதை ரசிக்கிறேனடி!
உதட்டுச்சாயம் பூசிக்கொள்ளாதே, வண்ணத்துப்பூச்சிகள் தேன் உறிஞ்ச சிரமப்படுவதாக புகார் செய்கின்றன...
அவள் உதடு கவிதை
உன் இதழ்கள் எழுத்துக்களாக மாறி, என் கண்ணங்கள் காகிதமாக மாறி, நாம் இருவரும் எழுத வேண்டும் பல்லாயிரம் கவிதைகள்...
முத்தச்சண்டையில் என்னை மொத்தம் தோற்கடித்து, மிச்சம் வைக்காமல் என் மேனியெல்லாம் ருசித்திடுவான்... விட்டு வைத்த வெட்கத்தைக் ,காணவே விடியல் வர காத்திருக்கிறான் என் கள்வன்...
காதல் முத்தம் கவிதை
ஒற்றை முத்தத்தில் காதலை வெளிப்படுத்த முடியாமல் தடுமாறிப் போகிறேன் ஓராயிரம் முத்தத்தில்...
சாந்தமாக உரையாடும் போது நீ தரும் முத்தத்தை விட, சண்டையின் போது நீ தரும் முத்தம் சற்றே நம் காதலை இன்னும் அழகாக்குகிறது!
Good Morning Kiss Quotes in Tamil
அதிகாலை எழுந்தவுடன் உன் இதழ்களுடன் முத்தச் சண்டையிட என் தூக்கத்தை கலைத்து, உன்னை தேடுதடி என் இதயம்!
எச்சில் முத்தம் கவிதை
உன் உதட்டின் மீது என் உதடு கவிதை எழுதும்போது வரும் "இச்" என்ற சத்தத்திற்கு முன் இணையான வரிகள் இந்த உலகத்தில் உண்டா?
இந்த அழகான ஓவியத்தின் மீது, என் இதழால் இன்னும் அழகாய் ஓவியம் தீட்ட ஆசை!
எச்சில் முத்தம் கவிதை
எத்தனை முறை எழுதினாலும், படித்தாலும் திகட்டாத ஒரே கவிதை, உன் இதழ்கள் தான்!
வெட்கம் என்பதன் அர்த்தத்தை, முத்தமிடுகையில் உன் இரு விழிகளை கண்டு புரிந்து கொண்டேன்!
நீ தந்த முத்தத்தின் ஈரம், இன்னும் உன் இதழ்கள் ரேகையாய் ஒட்டிக் கொண்டு இருக்கிறதடி...
உணர்ச்சி மிக்க கவிதை எதற்கு? அவள் உதடுகளோடு பேசுகையில்!
நெற்றி முத்தம் கவிதைகள்
என் முதல் முத்தம் உன் நடு நெற்றியில்! இதழை அடைய இனிய உன் அனுமதி வேண்டுமா என்ன?
உன் கன்னங்களில் இடரி விழுந்த முத்தங்களைக் கேட்டு பார், நம் காதலின் ஆழத்தை கூறும்...
Romantic Kiss Kavithai In Tamil
சத்தங்களை இல்லாதொழித்த யுத்தங்கள், முத்தங்களால் முடிவுக்கு வருமெனில், அந்நாளில் அந்நேரம் வரம்!
Lip Kiss Quotes In Tamil
பனிக்கூழுக்கும் சற்று குளிர்கிறது... அவள் இதழ் சுவைக்கையில்!
Lip Kiss Kavithaigal
உன் இதழின் முத்தத்திற்கு அந்த மலர்களும் தவம் கிடக்கும்... சூரியனும் இதயத்தில் உதிக்க இடம் கேட்குமடி வண்ண நிலவே... பெண் மலரே!
Kiss Tamil Quotes
"உனக்கு என்ன வேண்டும்?" என்கிறாய் "உன் ஈர அதரத்தால் என் நுதலின் வெப்பத்தை தணித்து விட்டுப் போ" என்கிறேன்!
காதல் முத்தம் கவிதைகள்
காத்திருப்பதும் சுகம் தான்! கட்டித்தழுவி நீ கொடுக்கும் முத்ததிற்காக...
Lip Kiss Kavithai In Tamil
இதழ்களோடு இதழ்கள் புதைத்துத் தேடும் தேடலில் தான், தேன் அமிர்தமும் கிடைக்கிறது...
Lip Kiss Kavithai
என் உதட்டின் மீது உன் உதடு எழுதிய முதல் கவிதை! எத்தனை முறை நினைத்தாலும் சலிப்பதே இல்லை!
Romantic Kiss Quotes In Tamil
தினமும் அவள் இதழை தொட்டுப் பாரிக்கும் தேநீர் கோப்பையாக மாற வேண்டும்!
Love Kiss Kavithai Tamil
உன் பின் நின்று, உன் கூந்தல் விலக்கி, என் மூச்சை உன் காதுக்குள் மெதுவாக படரவிட்டு, உன் இடையை மெதுவாக வருடி, உன் கழுத்தில் குட்டி குட்டியாக முத்தம் பதிக்க ஆசை...
Love Kiss Kavithai
அவளுடனான முடிவிலாச் சண்டைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தன, மோகனப்புன்னகை தவழும் அவள் இதழில் நான் பதித்த முத்தங்கள்...
Love Kiss Kavithai Tamil
கண்கள் ரசிக்க உதடுகள் ருசிக்க ஒரு முத்தத்தில் உயிரையும் பறித்து உட்கொண்டாயடி!
Romantic Tamil Kiss Quotes
உன் மதி முகமும், கயல் விழியும், முயல் இடையும், மாங்கனியும், மலர் இதழும் முத்தம் கேட்கிறதே!
கன்னத்தின் முத்தங்கள்
என்னுடைய சம்மதம் தேவை இல்லையாம் அவளுக்கு... என் கன்னத்தில் முத்தமிட! என்ன நியாயம் இது...
முதல் முத்தம் கவிதைகள்
கவிதையே எழுதத்தெறியா என் கைகள், நீ முத்தமிட்ட நாள் முதல் பேனாவும் காகிதமுமாக அலைகிறது!
First Kiss Quotes in Tamil
இதழ் முத்தம் கவிதை
அவளிதழ்களில் கவிதை எழுத முற்படுகிறேன்.. ஒவ்வொரு முறையும் பிழை என்றுரைக்கிறாள்! நானும் முயற்சித்து கொண்டே இருக்கிறேன், முடிந்த பாடில்லை மூச்சு தான் முட்டுகிறது!
கிஸ் கவிதைகள்
காதல் முத்தம் கவிதை
சிவப்பு நிறத்தில் நீ அணியும் உடைகளெல்லாம், உன் உதடுகள் போல் இருக்கிறது! முத்தம் கொடுக்கட்டுமா?
Kiss Quotes in Tamil
காமம் முத்தம் கவிதைகள்
பெண்ணானவளின் பலவீனம் 'கழுத்து முத்தம்' என்று மட்டும்தான் அவள் நினைத்திருந்தாள், அவனின் விளையாட்டுகளைக் காணும்வரை!
Kiss Lines in Tamil
அவள் முத்தம் கவிதைகள்
அவள்மேல் இருந்த கோபங்கள் யாவும் செல்லாக்காசாகிப் போனது, அவள் தந்த ஒற்றை முத்தத்தில்!
Her Kiss Quotes in Tamil
Message