Friendship Quotes in Tamil
Friendship Kavithai in Tamil - நண்பன் கவிதை வரிகள்
நட்பாக பழகிப் பார், கஷ்டங்கள் விட்டுப் போகும்! நீ எந்தன் வாழ்வில் வந்த பின்பு, வெற்றிகள் என்னைச் சேரும்!
நண்பர்களோடு சிரித்து, பேசி மகிழ்ச்சியாக இருந்த நாட்களே வாழ்வில் மறக்க முடியாத நாட்கள்...
நண்பர்களுடன் நேரத்தை செலவிடும் போது மட்டும் தான், பெரும்பாலும் தனிப்பட்ட கவலைகள் மறக்கின்றன....
இணைந்து இருக்கும் போது நிறை காண்பது நட்பல்ல... பிரிந்து இருக்கும் நிலையிலும் குறை காணாமல் இருப்பதே சிறந்த நட்பு...
நண்பன் கவிதை
நட்பு என்னும் புத்தகத்தில், துவக்கம் என்னும் பக்கங்கள் மட்டுமே உள்ளன... முடிவு என்னும் பக்கங்களை கண்டவர்கள் யாருமில்லை!
சுகங்களை பகிர்ந்து கொள்ளும்அன்பை விட, சோகங்களை பகிர்ந்து கொள்ளும் நட்பின் அன்பு உண்மையானது!
சேர்ந்ததற்கு காரணம் தெரியாது! பிரிந்து செல்ல காரணம் கிடையாது! உயிர் இருக்கும் வரை உடன் இருக்கும் உறவு, நட்பு!
Friendship Message in Tamil
வெற்றியோ தோல்வியோ... நல்ல நண்பன் அமைவதெல்லாம் வரம்!
பூவென்றால் வாசம்! காதலென்றால் நேசம்! தாயென்றால் பாசம்! எங்கள் நட்பு என்றும் சுவாசம்!
புரியாத நட்பு பயனில்லை! புரிந்த நட்புக்கு பிரிவில்லை...
Friendship Thoughts in Tamil
நண்பர்கள் பிரிவதில்லை! காரணம், அவர்கள் உறவுகள் அல்ல, உணர்வுகள்!
சிறுபிள்ளை முதல் பிரியாத, முறியாத உறவு நட்பு மட்டுமே!
என் சோக தாகத்தை தீர்க்கும் தண்ணீர் அவன்; என் சிரிப்பு மழையை அதிகரிக்கும் கருமேகம் அவன்; என் முடிவில்லா வலிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் மூலிகை அவன்; என் வழியில்லா பாதைகளில் எனக்கான வழிக்காட்டி அவன்; என் நண்பன்
True Friend Tamil Quotes
முகவரி தெரியாமல், உறவு முறை அறியாமல், ஒருவர் மேல் நாம் வைக்கும் நம்பிக்கையின் பெயர் தான் நட்பு!
நம் மகிழ்ச்சியையும், புன்னகையையும் தெரிந்திருக்கும் நட்பை விட, நம் ரணங்களையும், காயங்களையும் அறிந்திருக்கும் நட்பை பெற்றிருப்பது வரமே.
தனிமை இருட்டில் இருந்த எனக்கு மின்மினியாக உன் நட்பு ஒளி கிடைத்த பிறகு பிரகாசம் ஆனது என் வாழ்வு!
Friendship Poetry in Tamil
ஒரே ஒரு நல்ல நண்பன் உன் வாழ்க்கையில் இருந்தால் போதும்; நீ எதையும் கடந்து செல்லலாம்.
இங்கு வறுமையும் நிரந்தரமல்ல; வசதியும் நிரந்தரமல்ல! பழகும் பழக்கம் மட்டுமே நிரந்தரமானது!
கொதிக்கும் மணலில் நடக்கும் போது நம் கால்கள் ஒரு நிழல் தேடும்; அவ்வாறு நான் தேடிய நிழல்தான் உந்தன் நட்பு...
Friendship Quotes in Tamil in One Line
ஒரு தலைக் காதலின் இம்சைகளின், முதல் வரியும், முகவரியும், உடனிருக்கும் உயிர் நண்பர்களே!
வாழ்க்கை எனும் பாடலுக்கு நண்பன் பண்ணாக இருக்கிறான். இப்பண் இன்றி வாழ்வு இனிமையாகாது. பூர்த்தியும் ஆகாது!
தாய், தந்தை, அண்ணன், அக்கா, தம்பி, தங்கை சொந்தபந்தம் அத்தனையும் உடலில் ஒட்டியிருக்கும் பாகம் போல "பிறக்கும் போது நிச்சயமில்லை" மலரின் தேன் போலவும், கனியின் சுவை போலவும், மரத்தின் நிழல் போலவும் "நிச்சயமானது தான் நட்பு!"
Deep Friendship Quotes in Tamil
நண்பர்கள் என்ற கடலில் நீந்தி செல்லுங்கள்... ஒருவேளை மூழ்கி விட்டால் அங்கு நட்பு என்னும் படகு கை கொடுக்கும்...
சோகம், கஷ்டம், கவலை, கண்ணீர் - இது எல்லாத்தையும் மறக்கடிக்கிற பெரிய போதை, நண்பர்கள் மட்டும் தான்...
மனம் இருந்தால் வருவேன் என்றது காதல்... பணம் இருந்தால் வருவேன் என்றது சொந்தம்... எதுவும் வேண்டாம் நான் இருக்கிறேன் என்றது நட்பு!
Friendship Thoughts in Tamil
கருமேகம் இல்லாத வானம் செழிப்பை தர இயலாதோ, அதேபோல் தான் நண்பன் இல்லாத வாழ்க்கையும் மகிழ்ச்சியை தர முடியாது!
உயர்ந்த இடத்தில் இருப்பவனை உறவாக்கிக் கொள்வதை விட, உறவாய்க் கிடைத்தவனை உயர்த்திவிட்டு அழகு பார்ப்பதே உண்மையான நட்பு!
இன்னும் எத்தனை காலம் சென்றாலும், அந்த பள்ளி நினைவுகள் மட்டும் என்றும் மனதை விட்டு நீங்காது!
Friendship Quotes in Tamil with Pictures
தோள் மேல் தோள் வைத்து உலா வர எனக்கு ஒரு நட்பு இல்லையே என்று சிறியதொரு மனவருத்தம் எனக்குள்ளே!
மையில்லாப் பேனா கைவிரிக்க பேனா கடன் வாங்கியதில், வட்டியாய் வளர்ந்தது முதல் நாள் நட்பு!
இவனும் என் நண்பன் என்பதற்கும், இவன்தான் என் நண்பன் என்பதற்கும், நிறைய வித்தியாசங்கள் உண்டு!
Heart Touching Friendship Quotes in Tamil Font
காலம் நம்மை பிரித்தாளும், கடந்து தூரம் சென்றாலும் என்றும் இனிக்கும் கல்லூரி நினைவுகள்!
தாய்க்கு ஈடாக அக்கறை காட்ட, தோழியாலும் முடியும் என்பதை உணர்த்தவே வந்தாளோ?
வாழ்க்கைல எது இழந்தாலும் திரும்ப கிடைச்சிரும். ஆனா ஒரு நல்ல நண்பன இழந்துட்ட திரும்ப பெற முடியாது.
கல்லூரி நட்பு கவிதை
முற்றுபுள்ளி இல்லா நக்கலான அரட்டைகளின்றி நாட்கள் நகர மறுக்கிறதே!
காலம் நம்மை பிரித்தாளும் கடந்து தூரம் சென்றாலும், என்றும் இனிக்கும் கல்லூரி நினைவுகள்...
பச்சை பச்சையாய் பாசம் பொழிந்து, பல கேளிகள் கூடி கதைத்து, அதீத அன்பு அகத்தில் வைத்த அளவு கடந்த உறவுக்காரன், என் உடைமைகளின் சொந்தக்காரன்! என் நண்பன்!
Best Friend Friendship Quotes in Tamil
வானம் இல்லையேல் மழை பொழிவதில்லை, உயிர் இல்லயேல் இவ்வுடலும் இயங்குவதில்லை, தோல்வியை காணாதவன் வெற்றியை கண்டதில்லை, அதே போல இவ்வுலகில் நட்பை விட சிறந்த சொந்தமும் இல்லை!
இன்பமென்றொரு வாக்கியமே உங்களிடத்தில் கண்டேன்... வானளவும் எல்லையில்லையே நட்பின் பாதையில்! தளரும் பொழுதினில் தாங்கிபிடிக்கும் தாய்மையுள்ளம்! வலிநிவாரணியாய் அன்பின் பொய்கோபத்தில் அடிமையாகுதே நேசம் கொண்ட நெஞ்சம்... வற்றாத நதியாய் ஓடிடும் நாட்களில் நட்புடனே பயணம் செல்வோம்!
Tamil Friendship Kavithaigal
முகம் தெரிந்தும், முகம் தெரியாமலும் நாம் நேசிக்கும், நம்மை நேசிக்கும் அனைத்து நண்பர்களும் நட்போடு பயணிப்போம்!
நண்பர்கள் கவிதை வரிகள்
வானொலியில் ஒலிப்பரப்பவும் இல்லை, அலைப்பேசியில் அரங்கேற்றமில்லை! கடிதத்தால் கண்ணீரில் கதையெழுதிய மின்னஞ்சலுமில்லை! மைல்கள் பல கடந்தும், உணர்வுக்கண் திறந்து புன்னகை பூக்க செய்யும் நண்பர்களின் குறுஞ்செய்தி...
Friendship Best Quotes in Tamil
உயிர்போகும் சோகத்திலும், ஒரு துளி புன்னகையை என் முகத்திலும், ஒரு துளி அமைதியை என் மனத்திலும் பதிக்கவல்ல மாயவன், என் நண்பன்!
நட்பு கவிதை வரிகள்
உயிருள்ளவரை உடன் இருக்கும் என் நிழலுக்கு அவனே உருவம்... என் நண்பன்!
Best Quote for Friendship in Tamil
எதிர்ப்பவன் எமனாய் இருந்தாலும் சரி, நட்பென்னும் பலம் அருகில் இருந்தால், தைரியம் தானாய் பிறந்திடுமே!
Friendship Quotes in Tamil Lines
சின்னச் சின்ன கோபங்கள்! செல்ல சண்டைகள்! சின்னதாய் ஒரு தேங்ஸ்! பெரியதாய் ஒரு ஸாரி! சில நேர பிரிவு! வெகு நேர சந்திப்பு! சுருக்கமாக சொல்வதென்றால், இதுதான் கல்லூரி வாழ்க்கை!
One Line Friendship Quotes in Tamil
முன்பின் அறியாத உறவு, மூப்பு காலம்வரை தொடர்வது மீளா நட்பு!
Best Friendship Quotes in Tamil
ஒரே தட்டில் பல கைகள்! ஒரு கடலை மிட்டாயில் பல பற்கள்!சின்னச் சின்ன சண்டைகள்! சிரிப்பை ஏற்படுத்தும் கேளிக்கள்! இரவு நேரப் பேச்சுக்கள்! இனி வருமா அந்நாட்கள்?
Friendship Kavithai Varigal
சொந்தம் என்பது மழை துளி போல்... சிறிது நேரத்தில் மறைந்துவிடும்! ஆனால் நட்பு என்பது, வானம் போல் என்றும் தலை நிமிர்ந்து நிற்கும்!
Friendship Quotes in Tamil
சிறகுகள் இல்லாத பறவையின் வாழ்க்கையும், நட்பு இல்லாத மனிதனின் வாழ்க்கையும் அர்த்தம் இல்லாத வாழ்க்கை!
Natpu Tamil Quotes
எங்கோ பிறந்து வளர்ந்து, இரத்த பந்தம் இல்லாத, எதிர்பார்ப்பு இல்லாத, எந்த ஒரு எல்லைகளும் இல்லாத, அதீத அன்பு கொண்ட உறவு, நட்பு!
Nanbargal Quotes in Tamil
மகிழ்ச்சியான தருணங்களை பகிரும் போது மட்டுமல்ல, நீ தவறான பாதையில் செல்லும் போது உனக்கு அறிவுரை வழங்குபவே "உண்மையான நண்பன்"
Best Friends Quotes in Tamil Text
பேச்சுத் துணைக்கு யார் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், புலம்பி தீர்ப்பதற்கு ஒரு நெருக்கமான நட்பு வேண்டும்.
Best Friednship Quotes Tamil
எல்லா சூழலிலும், எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல், எந்த ஏற்றத்தாழ்வும் பாராமல், எல்லா வயதினரும், எப்போதும் கொண்டாடும் நல்லறவு, நட்பு ஒன்று மட்டும் தான்!