Distance Love Quotes in Tamil | தொலை தூர காதல் கவிதை

தொலைதூர காதல் கவிதைகள் | Long Distance Love Quotes in Tamil

Long distance relationship quotes in Tamil
அருகில் இருந்து அணைத்துக்கொண்டு வாழும் காதலை விட, தொலைவில் இருந்து நினைத்துக்கொண்டு வாழும் காதல், என்றுமே அழகானது தான்!
அவனின் பத்து நிமிட உரையாடலுக்கு பகல் முழுதும் காத்திருக்கிறோம் நானும் என் காதலும்! #தொலைதூர காதல்
கண்கள் பார்க்காமல், கை உனை தீண்டாமல் துடிக்கிறது உன் வருகையை எண்ணி... தொடும் தூரம் இல்லை! தொலை தூரம் அது தெரியவில்லை, இந்தக் காதலுக்கு.....
அனைத்து இடங்களிலும் இருக்கும் நீ சொல் மேகமே, என்னவன் நலமா?
தூரம் பெரிதாய்த் தெரியவில்லை... அவள் அன்பின் முன்பு!
வலியை விட கொடுமையானது, நாம் பேச நினைக்கும் ஒருவரிடம் பேச முடியாமல் போவது தான்!
உன்னையே தேடும் என் கண்களுக்கு என்ன சொல்லி புரிய வைப்பேன், நீயும் நானும் காணமுடியா தொலைதூரத்தில் இருக்கிறோம் என்பதை...
உன் அருகில் வந்து உன்னை அணைத்து அன்பின் மழையில் நனைந்து விட துடிக்கும் என் இதயமடி!
நிலவு இருக்கும் தூரத்தை விட, நீ இருக்கும் தூரம் குறைவு தான்; ஆனாலும் நிலவை காண முடிந்த என்னால், உன்னை காண முடியவில்லையே!
உன் முகம் பார்க்காமல் இருந்தாலும், உன் குரல் கேட்காமல் இருந்தாலும், என் அன்புக்குச் சொந்தமான ஒரே உறவு நீ மட்டும் தான்!
நேரம் நெருங்க விடாமல் தடுப்பதால், நினைவு துளிகளில் தவிக்கிறேன்!
காதலுக்காக தூது போகும் குறுஞ்செய்தியும், தொடர்புக்காக காத்திருக்கும் அலைபேசியும், ஏங்கிக் கிடக்கும், தொலைதூரக் காதலில்!
உன் வார்த்தைகள் என் காதோரம் இனிக்க, அருகில் இருந்து அணைத்தது போல், உன் வெதுவெதுப்பு என்னை கதகதப்பாக்குதடி!
நீ நிலவு அழகில் மட்டுமல்ல, தொலைவிலும் நான் உன்னை ரசிக்க முடியும்!
கரம்பிடித்து இதழ் அணைத்து கதைக்க, கனா இருந்தாலும் விரல் தொடாமல் விலகி இருப்பதில் வினோத சுகம் கண்மணியே!
உன்னுடன் இல்லாத ஒவ்வொரு மணித்துளியும் ஒரு யுகம் போல் நீள்கிறது, என் காதலை எப்படி உணர்த்துவது என்று தெரியாததால்!
நாம் நேசித்த ஒருவர் தொலை தூரத்தில் இருந்தாலும் கூட, அவர்களின் நினைவு என்றும் நமக்கு தொட்டுவிடும் தூரத்தில் தான் இருக்கிறது!
உனக்கும் எனக்கும் இடையிலான தொலைவு அதிகரித்ததால் தான், உனக்கும் எனக்கும் இடையிலான காதலும் அதிகரித்தது.
குயிலின் குரலோசை கேட்டேன், தொலைவிலிருந்து தொலைபேசி மூலம்!
தொலைவால் தூரத்தில் இருந்தாலும், என் நினைவால் நெஞ்சோரத்தில் நீ...
இதயங்கள் அருகில் இருக்கும் பொழுது, இருக்கும் இடங்கள் ஒன்றும் தூரமில்லை...
எப்போதும் நான் நினைப்பது ஒன்று தான்! தொலைவில் உள்ள உன்னை, எப்போது நேரில் காண்பேன் என்று...
முடியா பயணமும், விடியா இரவும், அழகான அக்கணங்களை அனுபவிக்க ஆசை அவனோடு மட்டும்...
நீள்நேரம் உரையாடி மகிழ்ந்தாலும், நினைவுகளோடு பேசி சிரித்தாலும், நின் அருகாமையில் இல்லையென்ற ஏக்கம் நித்தமும் என்னை கொல்கிறதடி, என் செல்ல குட்டி பிசாசே!
கண்களில் மைப்பூசும் கண்மணி இவள்; நீ வரவேண்டி தனிமையை தன்னோடு துணையகக் கொண்டு காத்து நிற்கின்றாள்!
எங்கு போனாலும் என் உலகம் என்றும் நீ மட்டுமே! துணை இன்றி வீணை வாழாது...
எவ்வளவு தூரம் போனாலும், இழுத்துப் பிடித்து இறுக்கி வைக்கிறது உன் காதல்...
நாட்களை எண்ணிக்கொண்டே நகர்கிறோம்.. நானும், என் காதலும்.. கள்வனின் வருகைக்காக!
இரசிப்பதற்கு ஆயிரம் இருந்தும், நான் இரசிக்கக் காத்திருப்பது உன்னை மட்டும்...
தொலைதூர காதல் என அறிந்தும், தினமும் வேண்டுகிறேன் உன் ஒற்றை நெற்றி முத்தம் கிடைக்காதா என்று!
உன்னிடம் பேச நினைத்ததை நிலவின் மூலம் தூது அனுப்புகிறேன்‌.. என் அன்பு கலந்த காதல் உன்னை வந்தடைந்ததா அன்பே?
கண் சிமிட்டிப் போகும் கலங்கரை விளக்கு நீ! உன்னை காணாமல் நடுக்கடலில் தத்தளிக்கும் படகு நான்!
கண்ணுக்குள் உன் முகம் தானடா வந்து வந்து போகும்; உன்னைக் காணும் நாளுக்காக ஏங்கி ஏங்கி வாடும்!
நான் தொலைத்த தூக்கத்தை எல்லாம், மொத்தமாக தூங்க வேண்டும் உன் மார்பில் படுத்து...
நமக்காக வாங்கி வைத்த தலையணைகள் இரண்டும் ஒன்றாகவே உறங்குகிறது தினமும்... ஆனால் நீ அங்கே, நான் இங்கே!
எங்கிருந்தோ என்னை ஆளும் உந்தன் எண்ண ஓட்டங்களே நான் மேலும் வாழ, என் ஆயுளை அதிகரிக்கச் செய்யும் கால எந்திரங்கள்!
ஈருடல் ஓருயிர் ஆக இருந்த நாம், இன்று இதயங்கள் இன்றி இடைவெளி விட்டுத் தவிக்கிறோம்!
இமைகள் திறந்து ஒருவரையொருவர் காணவில்லை என்றாலும், நம் இதயத்தால் இருவரும் இணைந்தோம் காதலர்களாக!
நாம் இருவர் கதைக்கும் நேரங்கள் குறைவாக இருந்தாலும், அந்த இனிமையான நினைவுகளில் மிதக்கும் நிமிடங்களே அதிகம்!
உன் அன்பு உண்மையானால், நீ கவலைபடாதே! பிரிவின் தூரத்திலும், அதிகம் நேசிக்கப்படுவாய்!
Message