Appa Quotes in Tamil | அப்பா கவிதைகள்
Dad Kavithai In Tamil
மகனை கஷ்டங்களே தெரியாமல் வளர்ப்பவர் நல்ல அப்பா! மகனை கஷ்டங்களை சந்திக்கவிட்டு எதிர்கொள்ள துணை நிற்பவர், சிறந்த அப்பா!
இப்படித்தான் இருக்க வேண்டும் என்றவர், இதயத்துடிப்பாய் நேசித்தவர், மகளின் திருமணத்தில் மறைமுக கண்ணீர் வடித்தவர், அம்மா என்ற மூன்றெழுத்து கவிதைக்கு முன்னால், அதிகம் ரசிக்க தவறிய மூன்றெழுத்து கவிதை அப்பா!
சில நேரம் பல வலிகளை மறக்க அப்பாவின் வார்த்தைகள் மட்டும் போதுமானதாக இருக்கின்றன!
கையில் ஏந்தி, தோள்களில் சுமந்து, நீ காணா உயரங்களை நான் காண ஆவல் கொண்டாயே.! தன்னலம் இன்றி உமை யாவையும் எனக்கு அளித்து எதிர்பார்ப்புகளுக்கு எதிரி ஆனாயே! என் தோழனாகிய தந்தையே!
Dad Kavithai
நீரோடையின் வேகத்திற்கு ஈடு கொடுக்கும் வேகம் அப்பாவின் உழைப்பே...
அவருள் அத்தனை அன்பு என்னிடம் சொல்லாமலே மறைந்திருக்கும். எத்தனை துயர் வந்தும் எனக்கென அதை தாங்கியிருக்கும்..!
என்னை மட்டும் அல்ல, என் கனவுகளையும் சுமந்து கொண்டு நடக்கிறார் என் அப்பா!
அம்மாவின் அன்ப தோசைமாதிரி! அப்பாவின் அன்பு தோசை கல் மாதிரி! தோசையின் ருசியை அறிகிற பலருக்கு, தோசைக் கல்லின் தியாகத்தை உணர முடிவதில்லை!
அப்பா இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து பார்க்கும் போதுதான் தெரியும், "அப்பான்னு" வார்த்தை அல்ல அது வாழ்கையின் பாடம் என்று..!
அசல் முன் நிழல் நடப்பது போல், என்றும் என் முன் நீ நடப்பாயே... முன்மாதிரியாக.....
தாய் கஷ்டப்படுவதை கண்டுபிடித்துவிடலாம். ஆனால், தந்தை கஷ்டப்படுவதை பிற்காலத்தில் பிறர் சொல்லித்தான் நமக்கே தெரியவரும்!