50+ Aasaigal Quotes in Tamil | ஆசை கவிதைகள்
Life Aasaigal Quotes and Aasaigal Kavithai Lyrics in Tamil and Aasaigal Kavithaigal SMS in Tamil
முடியா பயணமும், விடியா இரவும், அழகான அக்கணங்களை அனுபவிக்க ஆசை அவனோடு மட்டும்...
சொர்க்கத்தில் வாழ ஆசை இல்லை; உன் சொக்கும் நினைவில் மட்டுமே வாழ ஆசை!
உன் நினைவுக் கடலில் மூழ்கி நான் தொலைத்த நம் நாட்களை முத்துக்களாக எடுக்க ஆசை!
அளவில்லாத அன்பும், அதிகபட்ச ஆசையுமே அழுகைக்கு காரணமாக அமைகிறது!
என்னிடம் சண்டையிட அவளுக்கு ஆசை. அவள் என்ன செய்தாலும், மனம் அவள் வழியில் செல்ல வேண்டும் என்பதே எந்தன் ஆசை!
எனக்கு மிகப்பெரிய ஆசைகள் இல்லை! என் கவலைகளைத் தூக்கி எரிந்து விட்டு உன் கரம் பிடிக்கும் வரம் வேண்டும்!
புரியாதப் புதிராக இருந்தாலும், உன்னை நான் மட்டுமே படித்து முடிக்க வேண்டும் என்று ஆசை...
உன் அன்புக்கு அடிமையாக ஆசை தீரா காதலுடன், ஆயுள் வரை உன்னுடன் வாழ்ந்திட ஆசையடி எனக்கு... எதிர்பார்க்காமல் சந்தித்த உன்னை, என்னவளாக நான் எதிர்பார்க்கிறேன்...
உந்தன் காதலாக வாழ்வதை விட, உந்தன் மனைவியாக வாழும் ஆசையே என்னுள்!
எனக்குள் தோன்றிய ஆசைகளை உனக்குள் மட்டுமே விதைக்கிறேன்! மரமாக வளர்ந்து, காதலாக மலரும் என்ற நம்பிக்கையில்!
அடைய முடியாதென தெரிந்தும், ஆசையை மட்டும் ஏன் எழுதினான் பிரம்மணும் இந்த ஏழையின் விதியில்...
அவள் ஆசைகள் எல்லாம் வளர்பிறையாய் என்னுள் வளர்ந்து கொண்டிருக்கிறது... என் ஆசைகள் எல்லாம் தேய்பிறையாய் என்னுள் தேய்ந்து கொண்டிருக்கிறது...
காற்றோடு காற்றாய் கலந்து விட வரம் கேட்டேன்! அப்போதாவது, நீ என்னை சுவாசிப்பாய் என்ற ஆசையில்!
ஆடம்பரத்தை விரும்பாத தந்தை, தன் குழந்தையின் ஆசைகளுக்கு மட்டும் தடைகள் போடுவதில்லை!
ஆசைகளே இல்லாத அற்ப பிறவி என்னையும் பேராசைக்காரனாய் மாற்றிய அவள்!
காலம் முழுதும் உன்னோடே கடந்து விட ஆசைதான் - என் காதல் சம்மதித்தால்!
வாழ வேண்டும் என்பதில் ஆசை இல்லை! உன்னுடன் வாழ வேண்டும் என்பதில் தான் பேராசை!
வானத்தின் நிலத்தை ஆடையாக அணிந்தவளே உன்னை தொட்டு அள்ளி பூசிக்கொள்ள தான் ஆசை. ஆனால் நீ பார்த்த பார்வையால் தானே தள்ளி நானும் தள்ளி நின்றேன்.
இந்த அழகான ஓவியத்தின் மீது, என் இதழால் இன்னும் அழகாய் ஓவியம் தீட்ட ஆசை!
என்னுடைய கூடுதலான ஆசை, அவள் என் கூடவே இருக்கணும் என்பதே...
உந்தன் கன்னக்குழியில் புதைந்து, நான் முத்தாய் மாற ஆசை!
நீ அறியாமல் படும் வெட்கம்.... என்ஆசை நெஞ்சை தட்டும் சத்தம்... உன் சிதராத சிரிப்பு... என்னை சிதறவிட்டு, குட்டி இதயத்தை பூபோல் பறித்து செல்கிறாயடி!
ஆசை ஊற்றேடுக்கும் போதெல்லாம், அணைபோடுகிறது நாணம்!
உன்னை கட்டியணைத்துக் கொண்டு இந்த உலகம் மறந்து வாழ ஆசை என்னவனே...
எனக்கும், இரவில் படிக்கத்தான் ஆசை! உன்னைப் படிக்க இரவென்ன பகலென்ன? இருக்கும் போதெல்லாம் படிக்கிறேன், என்ன கெட்டுவிடப் போகிறது!
ஆசையாய் அவள் மார்பில் அணைத்துக் கொள்வதைக் காட்டிலும், இவ்வுலகில் வேறேதும் சுகமுண்டோ?
ஆசைக்கு கண்ணில்லை. அது மனிதனை நரகத்தில் தள்ளி விடும். அன்பில் கரைந்து விடு. அது உன்னை சொர்க்கத்தில் சேர்த்து விடும். - விவேகானந்தர்
ஆசையற்றவனே அகில உலகிலும் மிகப் பெரும் பணக்காரன். - விவேகானந்தர்
தேடிச் சென்று உன் அன்பை நிரூபிக்க நினைக்காதே. ஆசையாய் போனால், அவமானமே மிஞ்சும்!
மறந்தாவது உன்னை ஒரு தடவை மறந்திட ஆசை!
கடல் அலை காலை முத்தமிடுமிறது. அனுபவிக்க ஆசையில்லை. நீ இல்லை!
தேவைக்கு தொடக்கம் உண்டு! ஆசைக்கு முடிவு இல்லை!
ஆசைப்பட்ட பொருள் என்றோ ஒரு நாள் நமக்கு கிடைக்கும். ஆனால், ஆசைப்படும் போது கிடைக்கும் அந்தப் பொருளுக்கு மதிப்பும் மரியாதையும் உயருகிறது.
ஆசைக்கும் சில நேரங்களில் அளவீடுகள் அவசியப்படுகிறது!
ஆசைகளை அடக்கினால், அகிலத்தையே ஆளலாம்!
ஆசைகள் இல்லாத வாழ்க்கையை நீ எப்போது தேடிச் செல்கிறாயோ, அப்போது துன்பங்கள் இல்லாத வாழ்க்கை உன்னைத் தேடி வரும்!
கரை தொட்டு விடும் ஆசையில், விடாமல் முயற்சிக்கின்றன கடல் அலைகள்!
நீங்கள் உயரப் பறக்க ஆசை கொண்டால் உங்கள் மனதில் உள்ள அழுத்தத்தைக் குறைக்க வேண்டும்!
ஆசை இல்லாத மனம் வேண்டும், நிம்மதியான வாழ்க்கையை வாழ!
ஆசை பற்றிய கவிதைகள்
வாழ வழிகள் பல உண்டு வாழ்க்கையில் அதிக ஆசை ஏற்படுத்திக் கொள்ளாத வரை...