Diabetes and salt connection in Tamil

சர்க்கரை நோயால் பாதிப்பா? உணவில் உப்பைக் குறையுங்கள்!

Dr. Arjun Apr 4, 2026

சென்னையில் இயங்கும் சேப்பியன்ஸ் ஹெல்த் ஃபவுண் டேஷன், உலக சிறுநீரக தினத்தையொட்டி ஒரு கூட்டம் ஏற்பாடு செய்திருந்தது.
அதில் சேப்பியன்ஸ் ஹெல்த் ஃபவுண்டேஷனின் சேர்மனும், சிறுநீரகவியல் மருத்துவ நிபுணருமான டாக்டர் ராஜன் ரவிச்சந்திரன் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உணவில் உப்பையும் குறைத்தாக வேண்டும் என்று சொல்லி அதற்கான காரணங்களையும் விளக்கினார்.

உப்பை ஏன் குறைத்துக் கொள்ள வேண்டும்?

அதிக அளவிலான உப்பால் ரத்த அழுத்த அபாயம் அதிகரிக்கிறது. மாரடைப்பு, பக்கவாதம் வருவதற்கான சாத்தியங்களும் அதிகரிக்கின்றன. இந்தியாவில் பெரும்பாலான பெரியவர்கள் தினமும் 11கிராம் உப்பை உணவில் சேர்த்துக் கொள்கின்றனர். 5 கிராம் உப்பே போதுமானது.